தினமும் மூன்று முட்டைகளை உட்கொள்ளுங்கள்… வாவ் இவ்வளவு நன்மை இருக்கா..?


முட்டை என்பது நாம் நமது அன்றாட உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு உணவு வகைகளில் ஒன்றாகும். இதிலுள்ள விட்டமின் ஏ, ஈ, பி6, இரும்பு, பொஸ்பரஸ், மக்னீசியம், செலனியம் மற்றும் பி12 என்பன நமது உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்கி தேகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவி புரிகின்றன.

முட்டை அதிகளவில் உட்கொண்டால் எமது உடலில் உள்ள கொலஸ்ரோல் அதிகரிக்கும் என சிலர் கூறுவார்கள். எனினும் அக் கூற்று தவறானதாகும். எமது ஈரலானது நாளொன்றுக்கு 1000 – 2000 மில்லி கிராம் கொலஸ்ரோலை உற்பத்தி செய்கிறது. எனினும் நாம் உண்ணும் முட்டையில் இருந்து 180 – 186 மில்லி கிராம் கொலஸ்ரோல் கிடைக்கின்றது. எனவே ஈரல் தான் உற்பத்தி செய்யும் கொலஸ்ரோல் அளவை கட்டுப்படுத்திக் கொள்கின்றது என்பதே உண்மை.

இவ்வாறிருக்க நாளொன்றிற்கு மூன்று முட்டைகளை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம்.

01. மூளை வளர்ச்சிக்கு உதவுவதுடன் ஞாபகசக்தி அதிகரிக்கும். அத்துடன் கர்பிணித் தாய்மார்கள் இதனை உட்கொள்வதன் மூலம் கருப்பையில் பிரச்சினைகள் ஏற்படுவது குறைக்கப்படும்.

02. முட்டையில் உள்ள சத்துக்கள் கண் பார்வை குறைபாட்டை நிவர்த்தி செய்வதுடன் கட்ராக்ட் வருவதை தடுக்கும்.


03. முட்டையில் அதிகளவு புரோட்டீன்கள் இருப்பதால் அது தசை வளர்ச்சிக்கு உதவி புரியும்.

04. முட்டையில் உள்ள விட்டமின்-டி மற்றும் கல்சியம் என்பன என்பு வளர்ச்சிக்கு உதவுவதோடு என்புகளைப் பாதுகாக்கின்றன.

05. காலையில் உணவு உட்கொள்ளும் போது மூன்று முட்டைகளை உட்கொள்வதன் மூலம் பகல் உணவு உட்கொள்ளக் கூடிய அளவு குறைக்கப்படும். இதன் மூலம் உடல் நிறை குறைவடையும். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!