ஆளை விழுங்கும் மலைப்பாம்பில் ஜாலியாக சவாரி செய்யும் சிறுவன்… அதிர்ச்சி விடியோ..!


இந்தோனேஷியாவில் மலைக்க வைக்கும் உருவத்தில் இருக்கும் மலைப் பாம்புடன் சிறுவன் கட்டிப்பிடித்து விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

விலங்குகளின் மீது ஆர்வமுள்ளவர்கள், தங்களுக்கு பிடித்தமான செல்லப்பிராணியை அவர்களின் வீட்டில் வைத்து வளர்ப்பது வழக்கம். அந்த வகையில் நாய், பூனை, கிளி போன்றவற்றினை வளர்ப்பதை நாம் பார்த்திருப்போம்.

ஆனால், இந்தியாவைத் தவிர்த்த மற்ற சில நாடுகளில் ஒரு சில அச்சுறுத்தும் வகையான உயிரிகளை வீட்டில் செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றனர்.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பகுதியில் உள்ள ஒருக் குடும்பத்தினர், அவர்களது வீட்டில் பிரம்மாண்ட அளவில் உள்ள மலைப்பாம்பு ஒன்றை வளர்த்து வருகின்றனர்.

ரெடிகுலேட் வகையைச் சேர்ந்த அந்த பாம்பை அவர்கள் பல வருடங்களாக வளர்த்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த மலைப்பாம்புடன் குடும்பத்தினர் எந்த பயமின்றி மடியில் தூக்கி வைத்து கொஞ்சுவதும், அதனுடன் புரண்டு விளையாடுவதும் என விளையாடி வருகின்றனர்.

அந்த வீட்டில் உள்ள இரண்டு வயதுச் சிறுவனும் மலைப்பாம்பை கட்டிப்பிடித்து விளையாடுகிறான். படையே நடுங்கும் மலைப்பாம்புடன் விளையாடுகிறோம் என எந்த பயமின்றி சக குழந்தையுடன் விளையாடுவது போன்று சிறுவன் குதூகலமாக இருப்பது பார்ப்போரை வியக்க வைக்கிறது. தற்போது பாம்புடன் சிறுவன் விளையாடும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த விடியோக் காட்சியில், சிறுவன் சிறிதளவும் பயமின்றி பாம்பினைக் கட்டிப்பிடித்தும், அதன் மீதேறி சவாரி செய்தும் விளையாடுகின்றான். மேலும், அதன் வாலைப் பிடித்து இழுத்து கொஞ்சும் காட்சிகள் பலரிடையே அச்சத்தை ஏற்படுத்தினாலும், சிலர் அதனை ஆர்வத்துடன் ரசித்து வருகின்றனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!