வீட்டிலில் உள்ள வைத்தியர் கற்றாளை…. ஏன் தெரியுமா..?


கற்றாளையை வீட்டில் உள்ள வைத்தியர் என்று கூறுவார்கள். அது ஏன் தெரியுமா? பலவிதமான நோய்களுக்கு கற்றாளையை உபயோகித்தே தீர்வு காண முடியும் என்பதால் தான்.
இந்தக் கற்றாளையிலிருந்து கிடைக்கும் அனுகூலங்களை சரிவர அனுபவிக்க வேண்டுமாயின் அதனை குளிரூட்டியில் வைத்திருக்க வேண்டும் என்கிறது அண்மையில் மேற்கொண்ட ஆய்வொன்று.

அதுசரி, கற்றாளையை எவ்வாறு குளிரவைப்பது?

1. கற்றாளையை எடுத்து அதன் வெளிப்புறத் தோலை சீவ வேண்டும்.

2. பின்னர் கரண்டி ஒன்றை உபயோகித்து அதில் உள்ள கண்ணாடி போன்ற சாறை எடுத்து ஐஸ்கியூப் தட்டில் போட்டுக் கொள்ள வேண்டும்.

3. பின்னர் அதனை குளிரூட்டியில் வைக்க வேண்டும்.

4. இதனை எவ்வளவு நாட்களுக்கு வேண்டுமானாலும் வைத்திருக்க முடியும்.


எவ்வாறு உபயோகிப்பது?

குளிரூட்டியில் வைத்துள்ள கற்றாளையை எடுத்து நேரடியாகவே தோல் மீது பூசலாம். காலை மற்றும் மாலை இவ்வாறு பூசுவது சிறந்தது. பின்னர் 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரால் கைகால்களை கழுவ வேண்டும்.

இவ்வாறு செய்வதனால் நடக்கும் அனுகூலங்கள்

1. சிறு எரிகாயங்களை குணமாக்கும்
2. நெஞ்செரிவு குணமாகும்
3. தோல் வறண்டு போகாதிருக்கும்
4. வெரிகோஸ் குணமாகும்
5. வலிகள் குணமடைவதோடு புண் தொற்றுக்கள் குணமாகும்
6. பாதத்தில் உள்ள கட்டிகள், எரிச்சல் குணம் மற்றும் பங்கஸ் என்பன குணமடையும்
7. தோல் தொடர்புபட்ட பலவிதமான பிரச்சினைகள் குணமடையும். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!