உடலில் விட்டமின் –டி குறைவடைவதை வெளிக்காட்டும் 10 அறிகுறிகள்..!


விட்டமின்களின் பங்களிப்பு உடலின் ஆரோக்கியத்திற்கு முக்கிய இடத்தையே வகித்து வருகிறது. விட்டமின்-டி யைத் தங்கியே உடலின் ஒவ்வொரு கலங்களின் செயற்பாடுகளும் இருக்கிறது.

இதில் உள்ள சிறப்பு சூரியக்கதிர்களின் படும் போது உடலால் இது உற்பத்தி செய்யப்படுகின்றது. எலும்புகளின் வலிமைக்கு கல்சியம் மிக முக்கியமானது, அதனை உடலால் உறிஞ்சிக் கொள்வதற்கு விட்டமின்–டி அவசியமானது.

விட்டமின்–டி சில வகையான மீன்களிலும், முட்டை வெள்ளைக் கருவிலும், தாணியங்கள் போன்றவற்றில் செறிந்து காணப்படுகிறது. இது போதியளவு உடலிற்குக் கிடைக்கவில்லையென்றால் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தல் ஏர்படத் தான் செய்கிறது.

விட்டமின் –டி குறைவடைவதை அறிந்து கொள்வது எப்படி?

1.அதிகமாக வியர்த்தல்.
முன் தலை மற்றும் கைகளில் அதிகளவாக வியர்ப்பது விட்டமின் டி போதாமைக்கான முதல் அறிகுறியே. மேலும் வியர்க்கும் அளவு அதிகரித்தாலோ அல்லது வியர்ப்பதில் எதாவது மாறுதல் தென்பட்டாலோ விட்டமின் டி குறைவடைவது ஊர்ஜிதமாகி விடுகிறது.

2.உடல் வலிமையின்மை.
உணவு அருந்தியும் சரியான உறக்கத்தின் பின்பும் உடல் சோர்வு ஏற்பட்டால் அதற்கு காரணம் கண்டிப்பாக விட்டமின் டி குறைபாடாகவே இருக்கும். இதற்கான உடனடித் தீர்வு விட்டமின் டி சப்ளிமண்ட்களை எடுத்துக் கொள்வதே.


3.எலும்புகள் உடைதல்.
30 வயதை அடைந்ததுமே எலும்புகளின் நிறை அதிகமாவது நிறுத்தப்படும். இந் நிலையில் விட்டமின் டி குறைவடையும் போது எலும்புகளின் கனியுப்புக்கள் குறைவடைவதுடன் என்புருக்கி நோய் வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகும். அத்துடன் எலும்புகளின் வலிமைக்கு முக்கியமான கல்சியத்தை உடலால் உறிஞ்சிக் கொள்வதற்கு விட்டமின் டி மிகவும் அவசியமானது.

4.காயங்கள் ஆறாமை.
விட்டமின் டி குறைவடைவதனால் காயங்கள் ஏற்பட்ட பின்பு அது ஆறுவதற்கு நீண்ட நாட்கள் செல்கின்றது. அது மட்டுமல்லாது விட்டமின் டி வீக்கம் வலிகளைக் குறைப்பதிலும் காயங்களை தொற்றுக்களில் இருந்து பாதுகாப்பதிலும் அதிக பங்களிப்பைச் செய்து வருகிறது.

5.மன அழுத்தம்.
மூளையின் சிறப்பான செயற்பாட்டிற்கு விட்டமின் டி அவசியமானது. விட்டமின் டி குறைவடைவதனால் மூளைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் குறைவடையவும் இதனால் மன அழுத்தம் மட்டுமல்லாது வேறு பல மனநோய்களும் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது.

6.எலும்பு, முதுகுத் தண்டு வலி.
கல்சியத்துடன் விட்டமின் டியும் சேர்த்து எலும்பின் வலிமைக்கு உறுதுணையாக இருக்கும். விட்டமின் டி குறைவாக கிடைப்பதனால் எலும்புகளின் வலிமையில் அச்சுறுத்தல் ஏற்படுகிறது, மேலும் இரத்தத்தில் விட்டமின் டி குறைவடைவதனால் முதுகுத் தண்டுப் பகுதிகளில் வலி ஏற்படும். – © Tamilvoice.com | All Rights Reserved

7. சோர்வு.

8. அடிக்கடி நோய் ஏற்படுதல்.

9. முடி உதிர்வு.

10. தசைப் பிடிப்பு.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!