திராட்சைப் பழ எண்ணெய்யில் இவ்வளவு மருத்துவ குணங்களா..?


திராட்சைப் பழம் என்றாலே அணிவருக்கும் நன்கு பிடித்தது. இது சமநிலையான உணவுகளில் முக்கிய இடத்தைப் பிடித்துக் கொள்வதுடன், இதிலிருந்து தயாரிக்கும் எண்ணெய் உடலில் பல நோய்களிற்கு தீர்வாகவும் செயற்படுகிறது. இதில் அதிகளவான சிட்றஸ் ஊட்டச்சத்துக்கள் இருப்பதுடன், தொற்றுக்கள், நுண்ணங்கிகளிற்கு எதிரான செயற்பாடுகள், மன அழுத்தம் போன்றவற்றிற்கு மருந்தாகப் பயன்படும்.

திராட்சைப் பழ எண்ணெய்களின் சிறப்புக்கள் என்ன?

1. பக்டீரியா தொற்றுக்களை நீக்கும்.
சருமம், குடல், சிறுநீரகம் போன்ற பல இடங்களில் ஏற்ப்[அடும் பக்டீரியாத் தொற்றுக்களை இலகுவாக நீக்கி விடும்.

2. பசியைத் தடுக்கும்.
இந்த எண்ணெய்யைப் பயன்படுத்துவதனால் பசியை அதிகரிக்காமல் செய்வதுடன், தினமும் சில துளிகள் எடுப்பதனால் உடலையும் மனதையும் சிறப்பாக வைத்திருக்க உதவுகிறது

3. மன அழுத்தத்தை குணமாக்கும்.
மன அழுத்தம் அதிகமான நேரங்களில் குளிக்கும் நீரில் இதனைச் சேர்த்துக் கொள்வதுடன், கழுத்து, கை பகுதிகளிற்கு நறுமணப் பூச்சாகவும் பயன்படுத்தலாம்.

4. சமிபாட்டைத் தூண்டும்.
இது வயிற்றில் சமிபாட்டு செயற்பாட்டை அதிகரிக்கச் செய்வதுடன், சமிபாட்டுத் தொகுதிக்கு அதிகளவான இரத்தத்தை கொண்டு வருதல், நச்சுத் தன்மையை நீக்குதல், நீர்த் தேக்கத்தை தடுத்தல், தொற்றுக்கல் வராமல் பதுகாத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகிறது.


5. வலிகளை நீக்கும்.
வலிகள் ஏற்படும் போது அதனைப் போக்கவும், ஈரல் மற்றும் கல்லீரலின் தொழிற்பாட்டை அதிகரிக்கச் செய்யவும் த்இராட்சை எண்ணெய்யை குடிக்கும் நீர்ல் சில துளிகள் சேர்ப்பது மிகவும் சிறந்தது.

6. தொற்றுக்களை நீக்க வல்லது.
இது நுண்ணங்கிகளிற்கு எதிராகச் செயற்படும் திறன் கொண்டுள்ளதால் காயங்கள் ஏற்படும் போது அதில் தொற்றுக்கள் ஏற்படாமல் பாதுக்காக்கும்.

7. ஈஸ்ட் தொற்றுக்களை தடுக்கும்.
திராட்சைப்பழ எண்ணெய்யில் பங்களிற்கு எதிராகச் செயற்படும் தன்மை இருப்பதனால் ஈஸ்ட் தொற்றுக்களை குறைப்பதுடன், சிறுநீரகக் குழாய்களில் ஏற்படும் பக்டீரியா தொற்றுக்களையும் குறைக்கும் வல்லமை கொண்டுள்ளது.

8. அண்டிஒக்ஸிடன்.
இதில் அதிகளவான விட்டமின் சி இருக்கிறது. இது அன்டிஒக்ஸிடனாக இருப்பதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதுடன், பார்க்கும் மற்றும் கேட்கும் திறனையும் அதிகரிக்கச் செய்கின்றது.

முக்கிய குறிப்பு:
திராட்சைப்பழ எண்னெய்யை பயன்படுத்திய பின்பு கடுமையான சூரிய வெளிச்சத்திற்குள் சென்றால் சருமத்தில் எரிச்சல் ஏற்படும். எனவே அவற்றை தவிர்ப்பதோ அல்லது அவ் வேளைகளில் உடனடியாக நீரினால் கழுவுவது சிறந்தது. – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!