வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லையா..? இயற்கையாக ஒழிக்க இத ட்ரை பண்ணி பாருங்க..!


கரப்பான் பூச்சி என்றாலேயே எல்லோரும் முகம் சுழிப்பார்கள். அந்த அளவுக்கு கரப்பான் பூச்சியைக் கண்டால் எல்லோருக்கும் அருவருப்பு. ஏனெனில் அவை பார்ப்பதற்கு அசிங்கமாக இருப்பதுடன் நோய்க் கிருமிகளையும் வீட்டிற்குள் கொண்டு வந்து விடும்.

அது சரி, இந்த கரப்பான் பூச்சிகளை ஒழிப்பது எப்படி? அதற்கு நாம் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் என்ன?

01. டப்பாக்கள் மற்றும் போத்தல்களை வீசுவதற்கு முன்னதாக அதனை நன்கு கழுவி விட்டு வீசுதல் வேண்டும்.

02. சமையலறையின் தரைப் பகுதியை எந்நேரமும் சுத்தம் செய்தல் வேண்டும்.

03. உணவு உட்கொண்டவுடன் அந்த பாத்திரங்களை சேர்த்து வைக்காமல் உடனடியாக கழுவி விட வேண்டும்.

04. வீட்டை சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும்.


05. தண்ணீர் வடியும் பகுதிகளை எப்பொழுதும் சுத்தப்படுத்தி தண்ணீர் வடியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் தண்ணீர் என்பது கரப்பானுக்கு மிகவும் பிடித்த ஒரு விடயம்.

06. குப்பையை சேர விடாமல் சுத்தம் செய்து விடல் வேண்டும்.

இவ்வளவு செய்தும் அதையும் மீறி கரப்பான் பூச்சிகள் வீட்டில் குடி கொண்டு விட்டால் அதற்கு தீர்வு என்ன? பின்வரும் முறையில் அவற்றை இல்லாதொழிக்க முடியும்.

தேவையான பொருட்கள்
01. ஒரு வெங்காயம்
02. ஒரு தேக்கரண்டி பேக்கிங்சோடா

செய்முறை
வெங்காயத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடாவை கலந்து கொள்ள வேண்டும். அந்தக் கலவையை வீட்டின் மூலைப் பகுதிகளில் போட வேண்டும். அப்புறம் என்ன? எரிச்சலை ஏற்படுத்திய கரப்பான்கள் இறந்து கிடப்பதை நீங்களே அவதானிப்பீர்கள். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!