உங்களுக்கும் தூக்கத்தில் இப்படி நடந்திருக்கா..? நீங்கள் அறிந்திராத அதிசய தகவல்கள்..!


தூக்கம் என்பது எம் அனைவருக்கும் மிக முக்கியமானதொன்றாகும். இந்த தூக்கத்தால் உடல் இழந்த சக்தியை திரும்பவும் பெறுவதோடு எமக்கு புத்துணர்ச்சியையும் பெற்றுத் தருகின்றது.

இந்த தூக்கத்தின் போது பலருக்கு பல்வேறு விதமான அனுபவங்கள் ஏற்படுகின்றன. ஏன் அவ்வாறு ஏற்படுகின்றது? அவை எவை என்பது தொடர்பில் இப்போது பார்ப்போம்.

01. அறிவொளி கிடைத்தாற் போல் உணர்தல்
தூக்கத்தின் போது ‘ஆஹா’ என என்னத் தோன்றும் ஒரு வித உணர்வு எம்மில் சிலருக்கு ஏற்பட்டிருக்கும். ஆனால் சிலருக்கு கண் விழித்தவுடன் அது ஞாபகமிருக்காது. நாம் ஏதாவது ஒரு பிரச்சினையை எண்ணி குழம்பிப் போயிருப்போம். அந்த பிரச்சினைக்கு எமது மூளையே சரியான ஒரு தீர்வை பெற்றுத் தரும் தருணமே இதுவாகும். எமது ஆழ்மனதானது குழப்பத்திற்கான தீர்வை எமக்கு தெரியப்படுத்தும் உன்னதமானன் தருணம் இது. நாம் செய்ய வேண்டியதெல்லாம், கண் விழித்தவுடன் தூக்கத்தில் நாம் உணர்ந்ததை நினைவு கூர்வதே ஆகும்.

02. ஸ்லீப்அப்னியா
ஒருவர் தூக்கத்தில் இருக்கும் போது திடீரென அவரது சுவாசம் தடைப்படுவதே ஸ்லீப்அப்னியா ஆகும். இதன் போது தூக்கம் கெட்டுப் போய் முழிப்பு ஏற்படும். இது ஆரோக்கியத்திற்கு சிறந்ததல்ல. இதனால் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகம். புகைப்பிடித்தல், வயதுமுதிர்வு மற்றும் உடல் பருமனாயிருத்தல் என்பன இதனால் ஏற்பட வாய்ப்புண்டு.

03. உடம்பை விட்டு வெளியே இருத்தல் போன்ற உணர்வு
ஒரு சிலர் தூக்கத்தில் இருக்கும் போது அவர்களது உடலை விட்டு அவர்கள் வேறாக இருப்பது போல் தோன்றும். அரைவாசித் தூக்கம் அரைவாசி விழிப்பு போன்றதொரு நிலைமையின் போதே இவ்வாறு தோன்றும். இது போன்று ஏற்படுவது உண்மைதான். ஆனால் ஏன் இவ்வாறு ஏற்படுகின்றது என்பது இதுவரை சரியாகக் கண்டுபிடிக்கப்படவில்லை.

04. ஒரேவிதமான தொடர் கனவு ஏற்படுதல்
ஒரு சிலருக்கு ஒரே கனவு மீண்டும் மீண்டும் ஏற்படும். இது தொடர்ச்சியாக சில நாட்களுக்கோ அல்லது சில வருடங்களுக்கு இடையிலோ ஏற்படலாம். நடைமுறையில் நாம் கவனத்திற் கொள்ளாத ஒரு விடயம் தொடர்பில் எமது கவனத்தைத் திருப்பவே எமது மூளை இவ்வாறு ஒரே கனவை தொடர்ச்சியாக ஏற்படுத்துகின்றது என மனோதத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

05. உயரத்திலிருந்து விழுதல்
பலர் உயரத்திலிருந்து விழுவது போன்று கனவு காண்பார்கள். அப்போது திடீரென உறக்கத்தில் இருந்து விழித்துக் கொள்வோம். உண்மையிலேயே உயரமான இடத்திலிருந்து விழுவது போன்று கனவு ஏற்படுதலே இதற்குக் காரணம். இதன் போது மூளை பயப்பட்டு தசைகளைத் தூண்டும். அதன் போதே விழுவது போன்ற ஒரு உணர்வு ஏற்படும்.


06. கனவிற்குள் இன்னொரு கனவு
கனவு கண்டு கொண்டிருக்கும் போதே இன்னொரு கனவு காணும் நிலைமையே இது. அதாவது கனவு கண்டு நீங்கள் விழித்த பின்பும் கனவு காண்பதே இந்த நிலைமை ஆகும். இவ்வாறு ஏற்படக் காரணம் என்ன என்பது இன்னும் விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்கப்படவில்லை.

07. தூக்கத்திலேயே நடத்தல்
நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாலும் தசைகள் உயிர்ப்புடன் இருக்கும் நிலையே இதுவாகும். இதன் போது உறக்கத்தில் நடப்பவருக்கு வேலை செய்ய முடியும். எனினும் தூக்கம் கலைந்த பின் என்ன நடந்தது என்பதை அவர் அறிந்திருக்க மாட்டார். இந்த நிலைமை ஏற்படக் காரணம் என்ன என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

08. தூக்கத்தில் பேசுதல்
நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில், வாய் உளறலே இதுவாகும். நடைமுறையில் செய்து கொண்டிருக்கும் அல்லது ஏதேனும் செயலை நிறுத்த வேண்டும் என நினைத்தாலும் அதனை நிறுத்த முடியாமையே இதற்கான காரணம் ஆகும். இதனால் குறித்த விடயம் அல்லது அந்த விடயம் சார்ந்த ஏதேனும் ஒன்று தூக்கத்தில் தெரிவிக்கப்படுவதே இதுவாகும். இந்த பேச்சு பொதுவாக தெளிவற்று காணப்படும்.

09. தூக்கம் சார்ந்த மனப்பிரமைகள்
ஒருவர் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல ஆரம்பிக்கும் நிலையிலேயே இது ஏற்படுகின்றது. இதன்போது பொதுவாக பயத்தை உண்டு பண்ணக் கூடிய விடயங்கள் மற்றும் முகங்கள் வந்து போகும். இதற்கு முக்கிய காரணம் மனஅழுத்தமே. இருப்பினும் அதிகம் யோசிப்பதாலும் இந்த நிலைமை ஏற்படலாம். பொதுவாக சிறுவர்களுக்கே இந்த நிலைமை அதிகளவில் தோன்றும்.

10. ஸ்லீப்பரலைசிஸ்
ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது, தசைகள் செயலற்றிருக்கும் அதே சமயம் மூளை விழிப்பாக இருக்கும் நிலைமையே இது. இதன்போது உறக்கம் கலைவதோடு நாம் உறங்கிக் கொண்டிருக்கும் அறையில் வேறு யாரோ இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். அது மட்டும் அல்லாது உடம்பை சிறிதளவேனும் அசைக்க முடியாத நிலை ஏற்படும். இந்த நிலைமைக்கு சனத்தொகையில் 7 சதவீதமானவர்கள் முகங்கொடுத்திருக்கிறார்கள் என்கிறது அண்மையில் மேற்கொண்ட ஆய்வொன்று. – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!