நெஞ்செரிவு உள்ளவர்கள் இந்தப் பொருட்களை உண்ணக் கூடாது… ஏன் தெரியுமா..?


பாலுணவுப் பொருட்களில் லக்டோஸ் எனப்படும் ஒரு வகை இனிப்பு அல்லது சீனி அடங்கியுள்ளது. இந்த இனிப்பு உடலில் சேரும் பட்சத்தில் சிலரது உடலில் அதற்கேற்ற சகிப்புத் தன்மை காணப்படாது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் நெஞ்செரிவு ஏற்படும்.

இந்த பிரச்சினைக்கு முகங் கொடுப்பவர்கள் லக்டோஸ் அற்ற உணவுப் பொருட்களை உட்கொள்வதன் மூலம் இப் பிரச்சினையிலிருந்து விடுதலை பெறலாம்.

நெஞ்செரிவுக்கும் பாலுற்பத்திப் பொருட்களுக்கும் இடையில் உள்ள தொடர்பு குறித்து அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது, பாலுற்பத்திப் பொருட்களை உட்கொண்டவுடன் சமிபாடு தொடர்பான பிரச்சினையை எதிர் கொள்பவர்கள் நெஞ்செரிவுப் பிரச்சினைக்கும் உள்ளாகின்றனர் என்பது கண்டறியப்பட்டது. அதனால், பாலுற்பத்திப் பொருட்கள் தொடர்பில் அழற்சி உள்ளவர்கள் அதனைத் தவிர்ப்பதன் மூலம் நெஞ்செரிவிலிருந்து தப்பிக்கலாம்.

இருப்பினும் யோகட் போன்ற பாலுணவுப் பொருட்களில் புரோபயோட்டிக் அடங்கியுள்ளதால் அவை சமிபாடு தொடர்பான பிரச்சினையை தீர்க்கும் என்பதை மறந்து விடக் கூடாது.

பாலுணவுப் பொருட்களால் ஏற்படும் அழற்சியை எவ்வாறு கண்டுபிடிப்பது?


01. தொலில் சொறி
02. உதடு, நாக்கு மற்றும் தொண்டை என்பன வீங்குதல்
03. சுவாசிப்பதில் சிரமம்
04. மூச்சிரைப்பு
05. தலைசுற்றுதல்
06. மயக்கம்
07. வயிற்று வலி
08. வாந்தி
09. வயிற்றுப் போக்கு

எனினும், பாலுணவுப் பொருட்களுக்கு பதிலாக பின்வரும் உணவுப் பொருட்களை உட்கொள்ளலாம்.

01. சோயா
02. பாதாம்
03. முந்திரி
04. சோறு
05. சணல் தாவரம்
06. தேங்காய்

குறிப்பு
வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் நெஞ்செரிவு ஏற்படுமாயின் உடனடியாக வைத்தியரை நாடுவது மிகச் சிறந்தது. – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!