அடிக்கடி வாய்ப்புண் வருகின்றதா..? இந்த நீரால் கொப்பளித்தால் உடனடியாக மறைந்து விடும்..!


எம்மில் பலருக்கு வாய்ப்புண் வந்திருக்கக் கூடும். அதனால் வாய்ப்புண் வந்தால் அதனால் ஏற்படக் கூடிய அசௌகரியங்கள் தொடர்பில் நீங்கள் நன்றாகவே அறிந்திருப்பீர்கள்.

வாய் வலித்தல் மற்றும் உணவுப் பொருட்களை மென்று விழுங்குவதில் சிரமம் போன்றன இதனால் ஏற்படும் விளைவுகள் ஆகும். இந்த வாய்ப்புண்கள் பொதுவாக கன்னங்களின் உட்பகுதியில், உதடுகளின் உட்பகுதியில் மற்றும் நாக்கிற்கு அடியில் தோன்றும்.

இருப்பினும், இவற்றை இலகுவில் எவ்வாறு போக்கலாம் என்பது பற்றி இப்போது பார்ப்போம். ஒரு கோப்பைத் தண்ணீரை எடுத்து அதில் ஒரு தேக்கரண்டி உப்பை கலந்து கொள்ளவும்.

பின்னர் அதனை வாயினுள் எடுத்து சிறிது நேரம் வைத்திருந்து நன்றாக கொப்பளிக்கவும். அதன் பிறகு அந்த தண்ணீரை துப்பி விடவும்.


பின்னர் இரவு உறங்கப் போவதற்கு முன்னதாக ஒரு கோப்பை எலுமிச்சம் சாற்றை தண்ணீருடன் கலந்து அதனை பருகவும். அந்த சாற்றில் சிறிதளவேனும் சீனி சேர்க்கக் கூடாது என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு செய்தால் மறுநாள் காலையில் நீங்கள் விழித்துப் பார்க்கும் போது உங்களுக்கு தொல்லை கொடுத்த வாய்ப்புண் இருந்த இடம் தெரியாது ஆறிப் போயிருக்கும். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!