இந்த பொருட்களை பிறருடன் பகிர்ந்தால் ஆபத்தாம்… இத முதல்ல படிங்க..!


சில பொருட்களை நாம் பிறரிடம் இருந்து இரவல் வாங்குவது இல்லை. ஏனெனில் அவற்றை ஒருவர் மாத்திரமே உபயோகிப்பது ஆரோக்கியமானது என்பதால் தான். உதாரணமாக நாம் மற்றொருவருடைய சீப்பு, பற்தூரிகை மற்றும் சோப்பு என்பவற்றை உபயோகிக்க மாட்டோம். ஏனெனில் ஒவ்வொருவரும் அவர்களுக்கென்ற தனியான சீப்பு மற்றும் பற்தூரிகைகளை வைத்திருத்தலே ஆரோக்கியமானது.

எனினும். இது போன்று நாம் ஒவ்வொருவரும் ஏனையோருடன் பகிராமல் உபயோகிக்க வேண்டிய சில பொருட்கள் உள்ளன. அவை எவை அவற்றை எவ்வாறு சுத்தமாக உபயோகிப்பது என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்.

01. சிலிப்பர்
எமது வீட்டிற்கு வரும் உறவினர்கள், வீட்டினுள் அணிவதற்கென நாம் சிலிப்பர்களை கொடுப்பதுண்டு. இது தவிர்க்கப்பட வேண்டிய விடயமாகும். ஏனெனில் நாம் பாவித்த சிலிப்பர்களை அவர்களுக்கு கொடுப்பதற்கு பதிலாக புதிய சிலிப்பர்கள் சிலவற்றை வாங்கி வைத்து அவற்றை வழங்குவதே உத்தமம். ஏனெனில், நாம் தொடர்ந்து ஒரே சிலிப்பரை உபயோகிக்கும் போது எமது பாதங்கள் வியர்க்க ஆரம்பிக்கும். அதனால் சிலிப்பர்களில் பங்கஸ்கள் உருவாக வாய்ப்புள்ளது. எனவே நாம் உபயோகிக்கும் சிலிப்பர்களை 6 மாதத்திற்கு ஒரு முறை என மாற்றி விடுவது அவசியம். அல்லாது போனால், வினிகர் மூலம் சுத்தம் செய்வது சிறந்தது.

02. தோல் பராமரிப்பு உபகரணங்கள்
தோலை சுத்திகரிக்க பயன்படும் ஸ்பொஞ்ச், மசாஜ் செய்ய பயன்படும் ரோலர் மற்றும் க்ளென்சிங் தூரிகைகள் என்பவற்றில் எமது முகத்தில் உள்ள பக்டீரியாக்கள் காணப்படும். எனவே அவற்றை உபயோகித்து முடித்த பின் சவர்க்கார தண்ணீரில் கழுவுதல் வேண்டும்.

03. மெனிக்கியோர் உபகரணங்கள்
நெய்ல்க்ளிப்பர்ஸ், ட்வீஸர்ஸ், எபிலேடர்ஸ் மற்றும் ரேசர்கள் என்பன ஒருவரால் மாத்திரமே உபயோகிக்கப்பட வேண்டும். இவற்றில் சில சமயங்களில் இரத்தம் படிந்திருக்கக் கூடும். எனவே உபயோகித்து முடிந்த பின்னர் அவற்றை மதுசாரத்தால் கழுவி விட வேண்டும்.


04. துவாய்கள்
எமது உடலில் உள்ள தண்ணீரை உறிஞ்சுவதற்காகவே துவாய்கள் பயன்படுத்தப்படுகின்றது. இருப்பினும் குறித்த துவாய் சரிவர காயாத பட்சத்தில் அதில் பக்டீரியா மற்றும் பங்கஸ் உருவாக வாய்ப்புள்ளது. எனவே துவாயை பயன்படுத்திய பின்னர் அவற்றை வெயிலில் காய வைத்து எடுக்க வேண்டும். அதே போல் துவாயை கழுவியதன் பின்னர் அதனை மின்னழுத்தியில் அழுத்தி எடுக்க வேண்டும்.

05. டியோட்ரன்ட்ஸ்
பொதுவாக நாம் பயன்படுத்தும் டியோட்ரன்களில் பக்டீரியாக்கள் இருக்கும். டியோட்ரன்களை அக்குள் பகுதியில் பயன்படுத்தும் போது அதிலுள்ள பக்டீரியாக்களும் டியோட்ரனில் இருக்க வாய்ப்புண்டு. வியர்வையில் துர்நாற்றம் வீச பக்டீரியாக்களே காரணமாக அமைகின்றன. எனவே குளித்து முடித்த பின்னர் டியோட்ரன் உபயோகிப்பதே சிறந்து. அல்லது டியோட்ரன் உபயோகித்த பின்னர் அதனை துடைத்து விடுவது சிறந்தது.

06. ஹெயார்க்ளிப்ஸ் மற்றும் ரோலர்ஸ்
ஒருவர் பாவித்த ஹெயார்க்ளிப்ஸ் மற்றும் ரோலர்ஸ் என்பவற்றில் பங்கஸ் மற்றும் பேண்கள் இருந்தால் அவை அதனைப் பாவிக்கும் மற்றையவருக்கும் பரவும். எனவே அவற்றை பாவித்தவுடன் கழுவி காய வைத்தல் வேண்டும்.

07. ஹெட்போன்
ஒருவர் பாவித்த ஹெட்போனை மற்றொருவர் பாவிப்பதால் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. அதனால் ஹைட்ரஜன்பரொக்சைட்டில் நனைத்து எடுத்த பஞ்சொன்றின் மூலம் ஹெட்போன்களை சுத்தம் செய்தல் வேண்டும்.

08. லிப்ஸ்டிக் மற்றும் லிப்க்ளொஸ்
லிபஸ்டிக் மற்றும் லிப்க்ளொஸில் உள்ள எச்சிலால் வாயில் ஹேர்பிஸ் போன்ற நோய்கள் உருவாகும். ஆகவே லிப்ஸ்டிக் போன்றவற்றை வேறொருவருடன் பகிர்வது சிறந்ததல்ல. லிப்ஸ்டிக்கினை பாவித்து முடித்ததன் பின்னர், அதனை திசுக்களின் உதவியுடன் சுத்தம் செய்வதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!