ஜெலாட்டினுள் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா..?


ஜெலாட்டின் பல இனிப்பு பண்டங்களில் பயன்படுத்தும் பொதுவான சேர்மானம். இதன் சுவை அணைவரையும் அவர்கள் பக்கம் ஈர்ப்பதுடன் உணவின் அடர்த்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.

இது விலங்குகளில் இருந்தும் பெறப்படும் கொலாஜன் இல் இருந்து பெறப்படும் புரோட்டின் ஆகும். இது மனிதன் மற்றும் விலங்குகளின் சருமம் மற்றும் எலும்பு பகுதிகளில் அதிகமாகக் காணப்படும்.

ஜெலாட்டின் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள் என்ன?

1. புரோட்டின் சத்து அதிகம் உள்ளது.
ஜெலாட்டின் 99% புரதத்தினால் உருவானது. இது முழுமையான புரதச் சத்துக்களை தரவில்லையென்றாலும் அதிகமான அமினோஅமிலங்கள் மற்றும் குறைந்த அளவு விட்டமின், கனியுப்புக்களும் காணப்படுகின்றன. அத்துடன் போலேற், கல்சியம், பொஸ்பரஸ், சோடியம், கல்சியமும் உள்ளது.

2. எலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
ஜெலாட்டின் எலும்பு மற்றும் மூட்டுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் வாதம் மற்றும் அதனால் ஏற்படும் வலி, உடையும் தன்மையை குணப்படுத்தும்.

3. மூளையின் செயற்பாட்டிற்கு உதவும்.
இதில் உள்ள கிளைசின் மூளையின் செயற்பாட்டை அதிகரிக்கச் செய்வதுடன் ஞாபக சக்தியையும் மேம்படுத்துகின்றது. அத்துடன் மன வியாதிகளையும் குணப்படுத்துகிறது.

4. உடல் எடையைக் குறைக்க உதவும்.
இதில் கொழுப்புச் சத்து அறவே அற்றுக் காணப்படுவதுடன் மாப்பொருட்களும் குறைவாகவும் உள்ளது. அத்துடன் வயிறு நிரம்பிய உணர்வுடன் இருப்பதுடன் பசியையும் ஏற்படுத்துவதில்லை. இதனால் உடல் எடையைக் குறைக்க உதவும்.


5. சமிபாட்டு திறனையும் அதிகரிக்கச் செய்யும்.
இது சிறுகுடலின் பாதிப்பை குறைப்பதுடன் சமிபாட்டுத் தொகுதியின் மேற்த் தோல் பாதிப்படைவதையும் தடுக்கும். அத்துடன் உணவு சமிபாடடைவதற்கு தேவையான அமிலங்களைச் சுரக்கச் செய்வதுடன் சமிபாட்டை இலகுவாக்கும்.

6. சிறந்த தூக்கத்தை தரும்.
தூங்குவதற்கு முன் ஜெலாட்டின் சாப்பிடுவதனால் சிறந்த தூக்கத்தைப் பெற முடிவதுடன் பகலில் தூங்காமல் இருக்கவும் உதவுகிறது.

7. சிறப்பான மனநிலையை உருவாக்கும்.
அதில் காணப்படும் அமினோ அமிலமான கிளைசின் மன அழுத்தம், படபடப்பையும் குணப்படுத்துகின்றது. இதனால் மன அமைதியாக வைத்திருப்பதுடன் சிறந்த மனநிலையையும் ஏற்படுத்தும்.

8. இதயத்தின் ஆரோக்கியத்தை பேணும்.
ஜெலாட்டின் சாப்பிடுவதனால் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இருதய நோய்கள் வராமலும் தடுக்கின்றது.

9. நீரிழிவு நோயைத் தடுக்கும்.
ஜெலாட்டின் இரத்தத்தின் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துவதுடன் உடலில் இன்சுலீன் அளவைச் சீராக பேண உதவுகிறது.

10. சருமத்தை செழிப்பாக வைத்திருக்கும்.
இது கலங்களைப் புத்துணர்ச்சி பெறச் செய்வதுடன் சருமத்தை பொலிவாக வைத்திருக்கவும் உதவும். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!