வெறு வயிற்றில் தேநீரைக் குடிப்பதனால் என்ன நடக்கும் தெரியுமா..?


காலையில் தேநீர் குடிக்கும் பழக்கம் உங்களுக்கும் உள்ளதா? நம்மில் பலருக்கு காலையில் தேநீர் குடிக்கவில்லையென்றால் நாளை ஆரம்பிப்பதற்கான சக்தியும் திருப்தியும் கிடைப்பதில்லை. தேநீரில் உள்ள அண்டிஒக்ஸிடன் நோய் எதிர்ப்பு சக்தியையும், மெட்டபோலிசத்தை அதிகரித்தாலும் அதனை வெறு வயிற்றில் உட்கொள்வதனால் உடலிற்கு பல தீங்கை ஏற்படுத்துவது உங்களுக்கு தெரியுமா?

வெறு வயிற்றில் தேநீரைக் குடிப்பதனால் என்ன ஏற்படும்?

1. மெட்டபோலிச செயற்பாட்டைப் பாதிக்கும்.
வெறு வயிற்றில் தேநீரைக் குடிப்பதனால் அமிலம் மற்றும் காரத் தன்மையின் சமநிலையில் பாதிப்பு ஏற்படுகிறது இதனால் மெட்டபோலிச செயற்பாடு பாதிக்கின்றது.

2. பற்களின் எனாமலை அரிக்கும்.
தேநீரில் உள்ள சர்க்கரையினால் வாயில் உள்ள பக்டீரியாக்கள் அழிந்து விடுகின்றன. இதனால் வாயில் அமிலத் தன்மை அதிகரித்து பற்களின் எனாமல் கரைந்து விடுகிறது.

3. உடல் வறட்சி ஏற்படும்
தேநீர் குடிப்பதனால் உடலில் உள்ள நீரை சிறுநீர் மூலம் வெளியேற்றும் தன்மை உள்ளது. இரவு 8 மணி நேரம் தூங்குவதனால் ஏற்கனவே உடலில் நீரின் அளவு குறைவடைந்து உள்ள நிலையில் காலையில் தேநீர் குடிப்பதனால் உடல் வறட்சி ஏற்படுவதுடன் தசைப் பிடிப்புக்களும் ஏற்படும்.

4. வயிறு ஊதிப் போதல்
பால் தேநீரை வெறு வயிற்றில் குடிப்பதனால் அதில் உள்ள லக்டோஸ் குடலைப் பாதிக்கச் செய்து வாயுவை அதிகரிப்பதுடன், மலச்சிக்கலையும் ஏற்படுத்தும்.


5. குமட்டல் ஏற்படும்.
இரவில் இருந்து காலை எழுந்து கொள்ளும் வரைக்கும் உள்ள நேரத்தில் வயிறு முழுமையாக வெறுமை அடைந்து விடும். அந்த நேரத்தில் தேநீர் அருந்துவதனால் அது பித்தத்தை ஏற்படுத்தும் இதனால் குமட்டல், பதட்டம் ஏற்படுகிறது.

6. பால் தேநீர் குடிப்பது சிறந்ததல்ல.
காலையில் பால் தேநீரை அருந்துவதனால் உடல் மிகவும் சோர்வடைந்து விடுகிறது என்பதே உண்மை.
7. கறுப்பு தேநீர் அருந்துவதும் சிறந்ததல்ல.
கறுப்பு தேநீர் அருந்துவதனாலும் உடலிற்கு கெடுதலே ஏற்படுகிறது. இதனால் வயிறு ஊதிப் போவதுடன், பசியை ஏற்படுத்தாது.

8. காஃபின் உடலை பாதிப்படையச் செய்கிறது.
தேநீரில் உள்ள காஃபின் ஒரு போதும் உடலிற்கு சக்தியை தருவதில்லை மாறாக குமட்டல், தலைச்சுற்று, ஒரு விதமான படபடப்பு போன்ற பக்க விளைவுகளையே ஏற்படுத்துகிறது.

9. உடலில் இரும்புச் சத்து உறிஞ்சுவதைத் தடுக்கும்.
தேநீர் குடிப்பதனால் உடலால் இரும்புச் சத்து உறிஞ்சுவதைத் தடுக்கிறது. எனவே குறிப்பாக இரத்தசோகையினால் பாதிக்கப்பட்டவர்கள் வெறு வயிற்றில் தேநீர் குடிப்பதை தவிர்த்தல் சிறந்தது. – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!