இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜித் வடேகர் காலமானார்…!


இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் (வயது 77) உடல்நலக்குறைவால் காலமானார்.

மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கிரிக்கெட் பிரபலங்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை அந்நிய மண்ணில் வென்ற பெருமைக்குரியவர் வடேகர். இடது கை பேட்ஸ்மேனான இவர் 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு சதம் உள்பர் 14 அரைசதங்கள் விளாசியுள்ளார்.

அஜித் வடேகர் இந்தியாவின் 16-வது டெஸ்ட் கேப்டன். இவரது தலைமையில் இந்திய அணி 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 4 வெற்றி 4 தோல்விகளை கண்டுள்ளது.

முதல் தரப்போட்டியில் அதிகபட்சமாக 323 ரன்கள் குவித்துள்ளார்.1974-ம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இதன்பின்னர் இந்திய அணியின் பயிற்சியாளர்கள், நிர்வாகக்குழுத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்து வந்தார். இவர் இந்திய அரசின் உயரிய விருதுகளான அர்ஜூனா விருது (1967), பத்மஸ்ரீ (1972) விருதுகளை பெற்றுள்ளார்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!