கார் விபத்தில் உயிர் தப்பிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரவீன்குமார்!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரவீன்குமார் கார் விபத்தில் இருந்து உயிர் தப்பினார். மீரட், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன்குமார்.

இந்திய அணிக்காக 6 டெஸ்ட், 68 ஒரு நாள் போட்டி, பத்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடி மொத்தம் 112 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். 36 வயதான பிரவீன்குமார் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.

இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் வசிக்கும் பிரவீன்குமார் தனது மகனுடன் நேற்று முன்தினம் இரவு உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக காரை ஓட்டி சென்றார்.

அப்போது எதிரே வந்த கன்டெய்னர் லாரி கார் மீது பயங்கரமாக மோதியது. அதிர்ஷ்டவசமாக பிரவீன்குமாரும், அவரது மகனும் காயமின்றி உயிர் தப்பினர்.

இது குறித்து பிரவீன்குமார் கூறுகையில் ‘கடவுளின் கருணையால் இப்போது உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன். நல்லவேளையாக என்னுடைய கார் பெரியது என்பதால் தப்பித்தோம்.

இல்லையென்றால் படுகாயம் அடைந்திருப்போம். முதலில் பம்பர் தான் உடைந்திருக்கும் என்று நினைத்தேன். ஆனால் காரின் முன்பகுதி சேதமடைந்து விட்டது’ என்றார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!