கூகுள் குரோம் பிரவுசிங் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், சில அடிப்படை ஆண்டிவைரஸ் அம்சங்களை சேர்க்க முடிவு செய்துள்ளது. இந்த அம்சங்கள் பிரவுசர் டீஃபால்ட் செட்டிங்ஸ்களை தானாக மாற்றி பிழைகள் நிறைந்த டூல்கள் மற்றும் பிரவுசர் எக்ஸ்டென்ஷன்களை தடுக்கும்.
விண்டோஸ் கணினிகளில் பிழை ஏற்படுத்தும் அம்சங்கள் நுழைய முற்பட்டால் வாடிக்கையாளர்களை எச்சரிக்கை செய்யும் புதிய அம்சங்களை குரோம் பிரவுசரில் கூகுள் நிறுவனம் சேர்த்துள்ளது. அந்த வகையில் கூகுள் குரோம் பிரவுசர் வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி செட்டிங்ஸ் மாற்றப்படுவதை கண்டறிந்து, அவற்றை மீண்டும் ரீசெட் செய்யும்.
வலைத்தளங்களில் கிடைக்கும் சில தளங்கள் வாடிக்கையாள்களின் ஹோம்பேஜ் மற்றும் டீஃபால்ட் சர்ச் இன்ஜின் உள்ளிட்டவற்றை மாற்றவோ அல்லது வாடிக்கையாளரின் அனுமதியின்றி சில செட்டிங்ஸ்களை மாற்றியமைக்கும். இவ்வாறான சமயங்களில் குரோம் மாற்றங்களை கண்டறிந்து, அடுத்த முறை நீங்கள் குரோம் ஓபன் செய்யும் போது உண்மையான செட்டிங்ஸ்க்கு மாற்றக்கோரும்.
அடுத்து விண்டோஸ் இயங்குதளத்திற்கான கூகுள் குரோமில் ஆண்டிவைரஸ் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும். இதனால் கணினியில் உள்ள பிழை ஏற்படுத்தும் மென்பொருள்களை அழிக்க பரிந்துரை செய்யும். கூகுள் நிறுவனம் இந்த சேவையை வழங்குவதற்காக இசெட் (ESET) நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
இந்த சேவை வழக்கமான ஆண்டிவைரஸ் போன்று வேலை செய்யாது என்றும் இது கணினியில் கிளீன்-அப் சேவை போன்று வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய சேவை குரோம் விண்டோஸ் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கும்.
எனினும் புதிய சேவைக்கான ரேம் பயன்பாட்டை கூகுள் எவ்வாறு இயக்கப்போகிறது என்பது கேள்விகுறியாகவே உள்ளது. புதிய ஆண்டிவைரஸ் சேவை ஏற்கனவே வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பணிகள் துவங்கியுள்ளது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!