மாதவிடாய் காலத்தில் பெண் போலீஸ்க்கு உயர் அதிகாரியால் ஏற்பட்ட கொடுமை!


ஸ்பெயின் தலைநகரான பார்சினோவில் இளம்பெண் ஒருவர் பெண் போலீசாக பணியாற்றி வருகிறார். இவர் சர்வதே மகளிர் தினத்தன்று முக்கிய இடத்தில் பாதுகாப்பு பணிக்காக அனுப்பட்டார். பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது அவர் மாதவிடாய் அடைந்துள்ளார்.

இதனால் கழிவறைக்கு அவசரமாக செல்ல வேண்டியிருந்தது. வேறு வழியின்றி அவர் கழிவறைக்கு சென்று சுத்தம் செய்துகொண்டு 10 நிமிடங்கள் கழித்து பணிக்கு திரும்பி வந்தார்.

அப்போது பெண் போலீஸ் அதிகாரி பணியில் இல்லாததை அறிந்த உயர் போலீஸ் அதிகாரி அவருக்கு போன் செய்து கண்டித்துள்ளார். பணி முடிவடைந்த பிறகுதான் நீ கழிவறைக்கு சென்றிருக்க வேண்டும்.

அதற்கு முன்னால் சென்றது மன்னிக்கமுடியாத குற்றம் இதற்கு நீ தண்டனை அனுபவிக்க வேண்டும் என போலீஸ் அதிகாரி கூறியுள்ளார். உயர் போலீஸ் அதிகாரியால் அந்த பெண்ணின் வேலைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் பணியிடைநீக்கம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!