உங்க ஈரல் கருகி விட்டது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் இவைதானாம்..!


ஈரலின் செயற்பாடு உடலின் ஆரோக்கியத்திற்கு அவசியமானது. இதன் செயற்பாடுகளில் பாதிப்புக்கள் ஏற்படுவதனால் உடலில் பல நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.

ஈரல் பாதிப்படைந்தால் அறிந்து கொள்வது எப்படி?

1. சமிபாட்டு பிரச்சினை.
சமிபாட்டு செயற்பாட்டிற்கு இன்றியமையாத உறுப்பு பித்தப்பை. ஈரலில் பாதிப்பு ஏற்படும் போது சமிபாடு இன்மை, வயிற்றுப் போக்கு, கொழுப்பு சாப்பாடு ஒவ்வாமை, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

2. வயிற்று வலி.
ஈரல் பாதிப்படையும் போது தாங்க முடியாத தொடர்ச்சியான வயிற்று வலி ஏற்படுகின்றது.

3. பசியின்மை.
சமிபாடு இன்மையினால் பசி உணர்வு ஏற்படுவதில்லை.

4. வயிற்றுக் கோளாறுகள்.
ஈரல் பாதிப்படைவதனால் உடலில் நச்சுத் தன்மை தேங்குவதுடன் வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றது.


5. வயிற்றில் ஏற்படும் மாற்றங்கள்.
வயிற்றுப் பகுதி உப்பிப் போதல், வலி, பிடிப்புக்கள் போன்றன ஏற்படுகின்றன.

6. மலத்தின் நிறத்தில் மாற்றம் ஏற்படுதல்.
போதியளவு பித்தம் இல்லாமையால் மலத்தின் நிறத்தில் மாற்றம் ஏற்படுகின்றது. இது ஈரல் பாதிப்பின் முக்கிய அறிகுறியே.

7. சிறுநீரின் நிறத்தில் மாற்றம் ஏற்படுதல்.
ஈரல் பாதிப்படைவதனால் அதிகமான பிலிருபின் மலத்தின் ஊடாக வெளியேற்ற முடியாத நிலை ஏற்படும். இதன் போது பிலிருபின் சிறுநீர் மூலம் வெளியேற்வதனால் அதன் நிறத்தில் மாற்றம் ஏற்படுகின்றது.

8. மஞ்சள் காமாலை.
பிலிருபின் அதிகம் உடலில் தேங்குவதனால் மஞ்சல் காமாலை ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள அதிகம் உள்ளது.

9. சிறு குடலில் இரத்தக் கசிவு ஏற்படுதல்.
ஈரல் பாதிப்[இன் போது பொதுவாக ஏற்படுவது சிறுகுடலில் ஏற்படும் இரத்தக்கசிவே.

10. நீர்த் தேக்கம்.
ஈரல் பாதிப்பின் போதும் உடலில் நீர்த் தேக்கம் ஏற்படுகின்றது.

11. சோம்பல் தன்மை.
ஈரல் பாதிப்பின் போது அதிகளவான நச்சுத் தன்மை உடலில் இருப்பதனால் சோம்பல் ஏற்படுகின்றது.

12. சருமத்தில் கடிகள் ஏற்படுதல்.
சருமத்தில் கடி, இரத்த நரம்புகள் வெளியே தெரிவது என்பது சாதாரணமானதே. – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!