உணவை கட்டாயம் கைகளால் பிசைந்து தான் உண்ண வேண்டும்… ஏன் சொல்லுறாங்க தெரியுமா..?


உணவு உட்கொள்ளல் என்பது மனிதர்களாகிய ஒவ்வொருவருக்கும் மிகவும் முக்கியமானதொன்று.

உணவு உட்கொண்டாலேயே உயிர்வாழ முடியும். உயிர் வாழ்வதற்கு நல்ல உணவுகளை உட்கொள்வது போன்று, அவற்றை நல்ல முறையிலும் உட்கொள்ள வேண்டும். ஏனெனில், நல்ல முறையில் உணவு உட்கொண்டாலேயே அது ஒழுங்கான முறையில் சமிபாடடையும்.

அப்போது தான் அந்த உணவில் உள்ள சத்து எமது உடலுக்குச் சேரும். அதுசரி, உணவு சிறந்த முறையில் சமிபாடடைய வேண்டுமானால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

உணவு நல்ல முறையில் சமிபாடடைய வேண்டுமானால் நாம் எமது கைகளால் உணவு உட்கொள்வதை பழக்கமாகக் கொள்ள வேண்டும். ஏனெனில் நாம் உணவை கைகளால் பிசைந்து உண்ணும் போது அது நல்ல முறையில் சமிபாடடையும் என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.


ஏனெனில் நாம் உணவை கைகளால் தொடும் போது எமது ஐந்து விரல்களும் அந்த உணவின் மீது படும். அதன் போது எமது உடலில் உள்ள நரம்புகள் மூளைக்கு செய்தி அனுப்பும். அதைத் தொடர்ந்து சமிபாடடையச் செய்வதற்கான ஹோர்மோன்களை மூளை சுரக்க ஆரம்பிக்கும்.

அதே போல் ஆயுர்வேத முறையிலும் நாம் கைகளால் பிசைந்து உணவு உட்கொள்வதே சிறந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முறைப்படி எமது ஐந்து விரல்களும் நிலம், நீர், ஆகாயம், காற்று மற்றும் நெருப்பு என்பவற்றைக் குறிக்கும் எனவும் இதன் மூலம் ஐந்து சக்திகளும் ஒருங்கே செய்படுவதால் அது உடலுக்கு நன்மை பயக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலருக்கு உணவு சமிபாடடைவதில் பிரச்சினைகள் இருந்தால் சில சமயங்களில் வைத்தியர் கூட கைகளால் உணவை நன்கு பிசைந்து சாப்பிடுங்கள் எனக் கூறுவார்.
எனவே கைகளால் உணவு உண்ணுங்கள், வளம் பெறுங்கள். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!