பெண் துறவிகளை மிரட்டி பாலியல் உறவு வைத்த புத்த துறவி… சீனாவில் அதிர்ச்சி..!


சீனாவின் உயர்மட்ட புத்தமத துறவியும் அரசாங்கத்தின் அரசியல் ஆலோசகராக இருந்த துறவி மீது பீஜிங்கில் உள்ள ஒரு மடாலயத்தில் பெண் துறவி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

பெய்ஜிங்கில் உள்ள லாங்குவேம் கோவிலில் உள்ள சவுசெஞ்ச் மத போதனை உடையில் இருக்கும் போது துன்புறுத்துதல் மற்றும் தாக்குதல் நடத்தியதாக கூறபட்டது. ஆனால் இதனை புத்த கோவில் மறுத்து உள்ளது.

சவுசெஞ்ச் சீன அரசியலமைப்பு ஆலோசனை மாநாட்டின் 13-வது தேசியக் குழுவின் நிலைப்பாட்டு குழுவில் உறுப்பினராக உள்ளார். இவர் அரசியல் ஆலோசகராகவும், சீன- புத்த கூட்டுறவு சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.

லாங்குவேம் கோவிலின் ஜென்கியா, ஜியான்கி ஆகிய இரண்டு துறவிகள் பொது பாதுகாப்புப் பிரிவிடம் ஒரு அறிக்கையை சமர்ப்பித்து, சவுசெஞ்ச் பல பெண் துறவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும். அவர்களுக்கு சட்டவிரோத தகவல்களை அனுப்புவதோடு, அவர்களை மிரட்டி பாலியல் உறவு வைத்திருப்பதாகவும் குற்றம்சாட்டபட்டு உள்ளது.

ஆனால் கோவில் சார்பில் இரண்டு துறவிகளும் ‘பொய்யான மற்றும் தவறான தகவல்களை பரப்புகின்றனர்’ என்றும் பொதுமக்களை தவறாக வழி நடத்தியுள்ளனர் என்றும் தெரிவித்து உள்ளது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!