இனிப்பு சுவையுள்ள உணவுகளை அதிகம் விரும்பி உண்பவர்களா நீங்கள்? அப்ப முதல்ல இத படிங்க..!


இனிப்பு சுவையுள்ள உணவுகளை அதிகம் விரும்பி உண்பவர்களா நீங்கள்? அதனால் உடலில் ஏற்படும் மாற்றத்தைப் பற்றி நீங்கள் அறிவீர்களா? இவை உடலின் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதனால் அதனை அளவாக உட்கொள்வதே சிறந்தது.

அதிகளவான இனிப்பு சாப்பிடும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

1. இனிப்பில் அதிகம் நாட்டம் ஏற்படும்.
இனிப்பு அதிகம் சாப்பிடுவதனால் அதற்கு அடிமையாகிடுவீர்கள்.

2. உடலில் சக்தி குறைவடைந்து சோம்பல் தன்மை ஏற்படுதல்.
உடலின் சக்தி குறைவடையும் போதும், சோம்பல் ஏற்படும் போதும் அதிகளவான குளுக்கோஸை உட்கொள்வதனால் உடனடியாக சக்தி கிடைத்தாலும் அது நிரந்தர தீர்வாக இருப்பதில்லை. அத்துடன் முழு நாளும் சோர்வாகவே இருக்கும்.

3. உடல் எடை அதிகரித்தல்.
இனிப்பில் நார்ப் பொருட்களும், புரோட்டினும் இல்லாததனால் உணவை உட்கொண்ட திருப்தி ஏற்படுவதில்லை. அத்துடன் குளுக்கோஸை சக்தியாக மாற்றுவதற்கு அதிகளவான இன்சுலீன் தேவைப்படுகிறது.


போதியளவு இன்சுலீன் கிடைக்காததனால் குளுக்கோஸ் உடலில் படிவடைவதனால் உடல் எடை அதிகரிப்பதுடன் நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.

4. அடிக்கடி ஜலதோசம், காய்ச்சல் ஏற்படுதல்
அதிகளவான இனிப்பை உட்கொள்வதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைந்து அடிக்கடி ஜலதோக்ஷம், காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

5. இனிப்பு சுவையை உணர முடியாமை.
தொடர்ச்சியாக இனிப்பு சுவைகளை சாப்பிடுவதனால் சுவை சுரப்பிகள் அந்த சுவைக்கு பழக்கமடைந்து விடும். அதனால் வேறுபட்ட இனிப்பு சுவைகளில் மாற்றத்தை உணர முடியாது.

6. மூளையின் செயற்பாட்டில் மாற்றம் ஏற்படுதல்.
இரத்தத்தின் குளுக்கோஸ் அளவு திடீரென கூடிக் குறைவதனால் மூளையின் செயற்பாடுகளில் பாதிப்புக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.

7. கால் மற்றும் சரும பிரச்சினைகள் ஏற்படுதல்.
அதிகளவான இனிப்பை உட்கொள்வதனால் சருமத்தில் எக்ஸிமா, பருக்கள் தோன்றுவதுடன் சருமம் உலர்வடையவோ அல்லது எண்ணெய்த் தன்மையோ ஏற்படும். குறைவான இனிப்பை உட்கொள்வதனால் சருமத்தை சுத்தமாகவும் மென்மையாகவும் பேண முடியும். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!