நாக்கில் இப்படிப்பட்ட அறிகுறிகளை கண்டால் அலட்சியப்படுத்தாதீர்கள்…!


மனிதர்களாகிய எமக்கு கண், மூக்கு என்பவை எவ்வளவு முக்கியமோ அதே போல் நாக்கும் மிகவும் முக்கியமானதாகும். மற்றைய அவயவங்களுக்கு வழங்கும் முக்கியத்துவத்தை எம்மில் பலர் நாக்கிற்கு வழங்குவதில்லை.

காலையில் எழுந்தவுடன் மற்றும் இரவு உறங்கச் செல்லும் முன்னர் பொதுவாக அனைவரும் பல்துலக்குவது வழக்கம். ஆனால் பலர் நாக்கைத் துலக்குவதில் அக்கறை செலுத்துவதில்லை. பற்களுக்கு வழங்கும் முக்கியத்துவத்தை நாக்கிற்கும் வழங்குதல் அவசியம்.

அதுசரி, நமது உடலுக்கு பிரச்சினைகள் ஏற்படுவதைப் போன்று நாக்கிலும் பிரச்சினைகள் ஏற்படும் என்பதை நீங்கள் அறிவீர்களா? ஆம், நாக்கிலும் வீக்கம் ஏற்பட்டு நாம் அசௌகரியத்தை சந்திக்க நேரிடும்.

நாக்கில் வீக்கம் ஏற்படக் காரணம் என்ன?
நாக்கில் ஏற்படும் வீக்கத்திற்கு தனிப்பட்ட காரணங்கள் எதனையும் குறிப்பிட முடியாது. ஆனால் இந்த வீக்கம் ஏற்படுவதற்கு உடலில் உள்ள ஏனைய நோய்கள் காரணமாக இருக்கலாம்.


அவற்றை பினவருமாறு வகைப்படுத்தலாம்.
01. அழற்சி
02. வாயில் உள்ள காயங்கள்
03. விட்டமின் குறைபாடு
04. தோலின் அமைப்பு
05. ஈஸ்ட் தொற்று
06. மஞ்சள் காய்ச்சல்
07. விட்டமின்பி12 குறைபாடு
08. பாம்புக்கடி


நாக்கில் வீக்கம் ஏற்படுவதற்கான அறிகுறிகள்
01.முழுங்குதல் மற்றும் உணவை கடித்து உண்ணுதல் போன்றவை கடினமாகத் தோன்றும்.

02.நாக்கின் நிறம் மாறும்.

இது போன்ற சந்தர்ப்பங்களில் உடனடியாக வைத்தியரை நாட வேண்டும். மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை முறைப்படி உட்கொள்வதன் மூலம், இதற்கு தீர்வு காண முடியும். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!