தைராய்டு பிரச்சனையா..? அயோடின் சத்து உள்ள இந்த உணவுகளை மறக்காம சாப்பிடுங்க..!


தையிரோயிட் தொழிற்பாட்டிற்கு அத்தியவசியமானது அயோடின் என்பது அணைவரும் அறிந்ததே.அத்துடன் மெட்டபோலிசத்திற்கு உதவுவதுடன் புற்றுநோயைத் தடுக்கும் சக்தியையும் கொண்டுள்ளது. உடல் வளர்ச்சிக்கும், விருத்திக்கும் அயோடினின் பங்கு இன்றியமையாதது.

பொதுவாக ஒருவருக்கு தினமும் 150 மைக்ரோ கிராம் அயோடினும், கர்ப்பினிப் பெண்களுக்கு 220 மைக்ரோ கிராம் அயோடினும், பாலூட்டும் பெண்களுக்கு 290 மைக்ரோ கிராம் அயோடினும் தேவைப்படுகிறது.

அயோடின் அளவு குறைவடைவதனாலோ அல்லது அதிகரிப்பதனாலோ தையிரோடிசத்தின் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்துவதை தவிர்க்க முடியாது. ஹைபோ தையிரோடிசம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் அயோடின் அளவு குறைவடைதலே.

அயோடின் சத்து அதிகம் நிறைந்த உணவுகள்.
1. கடல் தாவரம்.
கடல் தாவரங்களில் 2000 மைக்ரோ கிராமிற்கு அதிகமான அயோடின் காணப்படுவதனால், இதனை உணவில் சேர்த்துக் க்ப்ள்வது அவசியம்.

2. பண்ணா மீன்.
மீன்கள் கடலில் உள்ள அயோடினை பிரித்து உட்கொள்வதனால், பண்ணா மீன் போன்றவற்றில் 99 மைக்ரோ கிராம் அயோடின் இருப்பதுடன் ஒமேகா-3 கொழுப்பமிலம், விட்டமின் டி, ஈ, பொட்டாசியம் போன்றனவும் உள்ளது.

3. பால்.
தினமும் பால் குடிப்பதனால் உடலிற்கு தேவையான அயோடினில் 56 மைக்ரோ கிராம் அயோடின் இதிலிருந்து கிடைக்கிறது. அத்துடன் இதில் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் செறிந்து காணப்படுகிறது.


4. இறால்.
கடல் உணவில் அயோடின் செறிந்துள்ளது என்பது நன்கறிந்ததே. தினமும் இறால் சாப்பிடுவதனால் 35 மைக்ரோகிராம் அயோடின் கிடைப்பதுடன், புரோட்டின், கல்சியம், கனியுப்புக்கள் போன்றனவும் கிடைக்கின்றன.

5. வறுத்த உருளைக் கிழங்கு.
வறுத்த உருளைக் கிழங்கில் தினமும் தேவையான அயோடினில் 40 வீதம் கிடைக்கிறது.

6. ஹிமாலயம் உப்பு.
அயோடின் செறிந்துள்ள ஹிமாலய உப்பை சமையல் உப்பிற்கு பதிலாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

7. கொடி முந்திரி.
கொடி முந்திரியில் 13 மைக்ரோ கிராம் அயோடின் இருந்த போதிலும் இது கலோரி அதிகம் உள்ள உணவு என்பதை மனதில் வைத்துக் கொள்வது அவசியமானது.

8. முட்டை
முட்டை குழந்தைகளின் மன வளர்ச்சிக்கு உஒதவுவதுடன் இதில் 12 மைக்ரோ கிராம் அயோடின் கிடைக்கிறது.

9. யோக்கட்.
யோக்கட்டில் 154 மைக்ரோ கிராம் அயோடின் இருப்பதனால் காலை உணவுகளில் பழங்களுடன் சேர்த்து மிருதுவான உணவாக உண்பது சிறந்தது.

10. சோளம்.
சோளத்தில் 14 மைக்ரோ கிராம் அயோடின் இருப்பதனால் இதனை அவித்து அல்லது சூப்பாக சாப்பிடுவது சிறந்தது.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!