ஆட்டுப்பாலில் இவ்வளவு மருத்துவ குணங்களா..? இதயத்துக்கு நல்லதாம்..!


நாம் அனைவருக்கும் பசும்பால் குடித்துதான் பழக்கம். அதனால் ஆட்டுப்பால் என்றால் பலர் முகஞ்சுழிப்பார்கள். ஆனால் ஆட்டுப்பால் குடிப்பதால் உடலுக்கு இத்தனை நன்மைகள் ஏற்படுகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஆட்டுப்பாலில் புரோட்டீன், கல்சியம் மக்னீசியம், பொஸ்பரஸ், பொட்டாசியம், விட்டமின் ஏ, விட்டமின் பி2, விட்டமின் சி, மற்றும் விட்டமின் டி ஆகியன அடங்கியுள்ளன.

இந்த சத்துக்கள் அனைத்தும் சேர்ந்து நம் உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன எனத் தெரியுமா?

01. இதயத்திற்கு சிறந்தது
ஆட்டுப்பாலில் உள்ள சத்துக்கள் மற்றும் தாதுக்கள் இதயத்தை பாதுகாப்பதோடு இதய வால்வுகளில் இரத்தம் தேங்கி நிற்பதை தடுக்கின்றது. இதன் மூலம் மாரடைப்பு ஏற்படுவது கணிசமாக குறைக்கப்படுகின்றது.

02. அழற்சி ஏற்படுவதை தடுக்கின்றது
ஆட்டுப்பாலில் உள்ள விட்டமின்கள் மனித உடலில் அழற்சி ஏற்படுவதை தடுத்து நிறுத்துகின்றது. ஒருவருக்கு குடல் அழற்சி ஏற்படுமாயின் அதை ஆட்டுப்பால் மிகத்துல்லியமாக சரி செய்யும்.


03. எலும்புகளை வலுவாக்குகின்றது
ஆட்டுப்பாலில் உள்ள கல்சியம் மற்றும் விட்டமின் டி என்பன என்பு வளர்ச்சிக்கு உதவுவதோடு என்புகளை வலுவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.

04. சமிபாட்டு பிரச்சினையை தீர்க்கின்றது
ஒருவர் ஆட்டுப்பாலை அருந்தும் பட்சத்தில், அவரது உடம்பில் அது ஒரு மிருதுவான தயிர் போன்ற படையை உருவாக்கி இலகுவில் சமிபாடடையும். இதனால் சமிபாட்டுத் தொகுதியில் உள்ள பிரச்சினைகள் நீங்குவதோடு உண்ணும் உணவுகள் இலகுவில் சமிபாடடைவதற்கும் உதவி புரியும்.

05. சகிப்புத்தன்மை அற்றவர்களுக்கு சிறந்தது
லக்டோஸ் காரணமாக சகிப்புத் தன்மை அற்ற பிரச்சினையால் அவதியுறுபவர்களுக்கு ஆட்டுப்பால் சிறந்ததொன்றாகும். ஆட்டுப்பாலில் குறைந்தளவு லக்டோஸ் காணப்படுவதால் சகிப்புத் தன்மை பிரச்சினை உள்ளவர்களுக்கு ஆட்டுப்பால் சிறந்த தீர்வாக அமைகின்றது. © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!