ஆண்களே… ஜிம்முக்கு போகாமலே பரந்து விரிந்த மார்பைப் பெற வேண்டுமா? இத செய்யுங்க..!


எல்லா ஆண்களும் தன் மார்பு விரிந்து நிமிர்ந்து இருப்பதையே விரும்புவர். இதற்கென பல்வேறு உடற்பயிற்சி நிலையங்களுக்குச் சென்று உடலை வருத்திக் கொண்டு பல்வேறு விதமான உடற்பயிற்சிகளில் ஈடுபடுவர். ஆனால், உடற்பயிற்சி நிலையங்களுக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தே சிறந்த முறையில் உடற்பயிற்சி செய்யலாம்.

அது எவ்வாறு என்கின்றீர்களா? பின்வரும் உடற்பயிற்சிகளை செய்தாலே போதும்.

01. பயிற்சி – 01
முதலில் தரையில் குப்புறபடுத்த நிலையில் இரு கைகளையும் ஊன்றிநின்று கொள்ள வேண்டும். இரு கைகளும் சம தொலைவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதே நேரம் கால்களை மடக்காமல் இருக்க வேண்டும். அப்படியே உடம்பை தரையை நோக்கி கொண்டு செல்ல வேண்டும்.

பின் அப்படியே மேல் நோக்கி எழ வேண்டும். இதை, முதலில் 10 இல் இருந்து 30 தடவை வரை செய்து பின்னர் எண்ணிகையை கூட்டி கொள்ளலாம். முதலில் இந்த பயிற்சி செய்யும் போது கடினமாக இருக்கும். எனினும் நன்கு பழகிய பின்னர் மிகவும் எளிமையாக இருக்கும்.

இப் பயிற்சி செய்வதால் மார்பு விரிவடைவதுடன் தோள்பட்டை மற்றும் கைகளும் வலிமை பெறும். ஆனால் இதை கவனமாக கையாள வேண்டும். அவசரமாக செய்தாலோ, தவறாக செய்தாலோ கழுத்து பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.

02. பயிற்சி – 2 தரையில் முதுகு நன்குபடும்படி படுத்துக் கொண்டு தலையைலே சாக தூக்கிகைகளால் பிடித்துக் கொள்ள வேண்டும். இரண்டு கால்களையும் மடக்கி தரையில் ஊன்றி கொள்ள வேண்டும். பின்னர் கால்களை அப்படியே வைத்து கொண்டு தலையை மட்டும் முழங்காலை நோக்கி கொண்டு வர வேண்டும்.
இப்படி செய்யும் போது முதுகு வளையாமல் பார்த்து கொள்ள வேண்டும். இது முதுகுவலி உள்ளவர்களுக்கும் சிறந்தது. © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!