பேக்கிங் சோடாவை கொண்டு வயிறு, தொடை, பின்புறப்பகுதியை விரைவில் குறைப்பது எப்படி..?


விரைவாக நிறையைக் குறைக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு பெண்களினதும் விருப்பாகக் காணப்படுகிறது. இதற்காக நிறைக் குறைப்பது தொடர்பிலான செயல்முறைத்திட்டங்கள், பத்திய முறைமை என்பன காணப்படுகின்றன.

ஆனால் இவற்றின் இறுதியில் மீண்டும் பழைய நிலைக்கு உடல் எடை வருவதோடு பணமும் விரயமாகிறது. இந்த கட்டுரையின் வாயிலாக நாம் பேக்கிங் சோடாவின் அற்புதமான விளைவுகள் பற்றி அறியத் தருகிறோம். பேக்கிங் சோடா எமது சமையலறையில் தினமும் பயன்படுத்தும் ஒன்றாகக் காணப்படுகிறது. ஆனால் பலர் பேக்கிங் சோடாவிலுள்ள நன்மைகள் பற்றி அறிந்திருப்பதில்லை.

உங்களுக்கு தட்டையான மற்றும் பிடிப்பான வயிறு, கவர்ச்சிகரமான உடல் வேண்டுமானால் ஆரோக்கியமான பத்திய முறைமை மற்றும் ஒழுங்கான உடற்பயிற்சி அவசியம். இன்றைய வேகமான வாழ்க்கையில், மக்களுக்கு நேரம் போதாமையின் காரணமாக தமக்கு விருப்பமான உடலமைப்பைப் பெற முடிவதில்லை. எவ்வாறெனினும் பேக்கிங் சோடா உடல் எடைக் குறைத்தலுக்கு வெகுவாக துணைப்புரியும்.

பின்வரும் 3 வழிகளினூடாக பேக்கிங் சோடாவைப் பயன்டுத்தலானது மென்டபொலிசம் (metabolism) உயர்த்துவதோடு கெலோரிஸ் உம் குறைத்து நிறைக் குறைப்பைத் துரிதப்படுத்தும்.

1.பேக்கிங் சோடா, எலுமிச்சை சாறு, திராட்சைப்பழம்
• தேவையான பொருட்கள்
 அரைக் கோப்பை தண்ணீர்
 1 எலுமிச்சை அல்லது திராட்சை
 1 தேக்கரண்டி பேக்கிங் சோடா

• தயாரிக்கும் முறை
அனைத்து பொருட்களையும் ஒன்றாகக் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இந்த பானத்தை ஒவ்வொரு நாளும் காலை உணவு உண்ண 20 நிமிடங்களுக்கு முன்னால் அருந்த வேண்டும்.

2. பேக்கிங் சோடா, ஆப்பிள் சாறு வினாகிரி
• தேவையான பொருட்கள்

 1 கோப்பை தண்ணீர்
 2 மேசைக்கரண்டி ஆப்பிள் சாறு வினாகிரி
 அரைத் தேக்கரண்டி பேக்கிங் சோடா

• தயாரிக்கும் முறை
அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து ஒவ்வெர்ரு நாளும் காலை உணவுக்கு முன் அருந்த வேண்டும்.

3. பேக்கிங் சோடா, பழங்கள்
• தேவையான பொருட்கள்

 1 கோப்பை ஸ்ரோபெரி
 ஒரு கொத்து புதிதான புதினா
 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
 2 கோப்பை தண்ணீர்
 2 எலுமிச்சை

• தயாரிக்கும் முறை
அனைத்து பொருட்களையும் ஒன்றாகக் கலந்து ஒரு நாளில் 2 முறை அருந்த வேண்டும். புத்துணர்ச்சி பெற வேண்டுமாயின் இப்பானத்தில் ஐஸ் கட்டிகளையும் இட்டு அருந்தலாம்.

சிறந்த பலனைப் பெற சீனி, மாப்பொருட்களை உண்ணுதல், மதுபானம் அருந்துதல், பதப்படுத்தபபட்ட இறைச்சி வகைகளை உண்ணுதலை தவிர்க்க வேண்டும்.- – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!