தொங்கும் சதையை குறைத்து சமிபாட்டை சரியாக பேணும் அதிவேக மருந்து இதோ..!


உடல் எடையை குறைக்க பல செயற்கை மருந்துகளும் மருத்துவங்களும் உள்ள நிலையிலும் கூட இயற்கை மருந்துகளும் மருத்துவங்களுமே அதிகூடிய பயனை தர கூடியவை என்பது நாம் அனைவருக்கும் உறுதியாக தெரிந்த ஒரு விடயம்.

அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருக்கும் இந்த கலவையானது உடல் எடையை குறைப்பதில் உச்சபட்ச பயனை தரும் சில பாதார்த்தங்களை பற்றியே பார்க்கவுள்ளோம்.தேனின் மருத்துவ குணம் பற்றி ஏற்கெனவே நாம் பார்த்துள்ளோம் அதே நேரம் தேசிக்காய் சாறுடன் இதனை சேர்க்கும் போது அது மிகவும் உயர்ந்த பலன் ஒன்றை வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அப்பிள் சாறு வினாகிரி என்பது உடலின் கொழுப்பை குறைக்க உதவும் மிக அத்தியாவசியமான ஒரு பொருளாகும் அத்துடன் இலவங்க பட்டையானது உடலின் வடிவமைப்பை சரியாக பேணுவதற்கு மிகவும் உதவும் ஒரு பதார்த்தமாகும் ஆக இவ்வாறு அனைத்து குணங்களும் கொண்ட இந்த கலவையானது எவ்வாறானதாக இருக்கும் என்பது நாம் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை இப்பொது அதற்கான செய்முறையை பார்க்கலாம் .

• சேர்மானங்கள்

 1 தேக்கரண்டி இலவங்கப்பட்டை
 2 தேக்கரண்டி அப்பிள் சாறு வினாகிரி
 1 தேக்கரண்டி தேன்
 2 தேக்கரண்டி தேசிக்காய் சாறு
 1 கிண்ணம் தண்ணீர்

மேற்குறிப்பிட்ட பொருட்களின் கலவையானது உங்கள் கொழுப்பை கரைக்கவும் நீரிழிவு நோயை குறைக்கவும் உடலின் இரத்த அழுத்தத்தை சரியாக பேணவும் உதவும் .

• தயாரிக்கும் முறை
மேற்குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கலக்கி குளிரூட்டியில் வைக்கவும் தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதனை அருந்தி வருவீர்களாயின் கொஞ்ச நாட்களியே சிறப்பான முடிவுகளை பார்க்கலாம். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!