புகைப்பிடித்தலை நிறுத்தினால் உடலில் ஏற்படும் அற்புதமான மாற்றம் பற்றி தெரியுமா..?


புகைப்பிடிக்கும் பழக்கத்தினால் உடலின் ஆரோக்கியத்திற்கு பாதிப்பையே ஏற்படுத்துகிறது. இந்த பழக்கத்தை கைவிடுவதனால் உடலில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து கொள்வது அவசியமானது.

புகைப்பிடித்தலை நிறுத்துவதனால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்.

1. ஆரம்ப நிலை முன்னேற்றம்.

புகைப்பிடிப்பதை தவிர்த்து 20 நிமிடங்களின் பின்பு, இதயத் துடிப்பும், இரத்த அழுத்தமும் சீராக இருக்கும்

2. சாதரன நிலையை அடைதல்.

8 மணி நேரங்களின் பின்பு, இரத்தத்தில் carbon monoxide அளவு குறைவடைந்து, ஒக்ஸிஜன் அளவு அதிகரிக்கும்.

3. மாரடைப்பிற்கான வாய்ப்புக்கள் குறைவடைதல்.

24 மணி நேரங்களின் பின்பு, மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புக்கள் குறைவடையும்.

4. புலனுணர்வுகளை மீட்டெடுத்தல்.

48 மணி நேரங்களின் பின்பு, சுவை, வாசனை போன்ற புலனுணர்வுகள் மேம்படுவதுடன், நரம்பு
முடிச்சுக்கள் மீண்டும் வளர ஆரம்பிக்கும்.


5. இலகுவான சுவாசம்.

ஒன்று முதல் ஒன்பது மாதங்களிற்குள் உடலில் சக்தி மீளளிக்கப்படுவதுடன், சுவாசப் பிரச்சினை, இருமல், சைனஸ் போன்றவை குணமடையும்.

நுரையீரல் சுத்தமடைவதுடன், தொற்றுக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவடையும்.

6. இதயத்தின் ஆரோக்கியம் மேம்படுதல்.

ஒரு வருடத்தின் பின்பு, இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புக்கள் இரண்டு மடங்கு குறைவடையும்.

7. புற்றுநோய்களிற்கான வாய்ப்புக்கள் குறைவடையும்.

5 வருடங்களின் பின்பு, தொண்டை, வாய், குடல் புற்றுநோய்கள் வருவதற்கான வாய்ப்புக்கள் பாதி குறைவடைவதுடன், நுரையீரல் பாதிப்பினால் இறப்பதை இரண்டு மடங்கு தடுக்க முடியும்.

8.நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கும்.

10 வருடங்களின் பின்பு நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புக்கள் குறைவடைவதுடன், கணையகலங்கள் மாறுவதனால் பல உறுப்புகளிலும் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும்.

9. மாற்றம்.

15 வருடங்களின் பின்பு, புகைப் பிடிக்காதவர்கள் போன்று இதய நோய் வருவதற்கான வாய்ப்புக்கள் புகைப் பிடிக்காதவர்கள் போன்று இவர்களுக்கும் குறைவாகவே இருக்கும்.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!