ஆப்பிள் சிடர் விநாகிரியை யாரெல்லாம் பயன்படுத்தினால் ஆபத்து..? இத முதல்ல படிங்க..!


உடலில் ஏற்படும் பல நோய்களிற்கு அப்பிள் சிடர் விநாகிரியை பயன்படுத்தி வருகின்றனர்.

இது உடலிற்கு பல நன்மைகளைச் செய்கின்ற போதிலும் சில மரிந்துகளை உட்கொள்ளும் போது ஆப்பிள் சிடர் விநாகிரியை பயன்படுத்தினால் உடலிற்கு ஆபத்தை ஏற்படுத்துவதை நீங்கள் அறிவீர்களா?

ஆப்பிள் சிடர் விநாகிரியின் நன்மைகள்.

பலர் உடல் எடையக் குறைப்பதற்கு ஆப்பிள் சிடர் விநாகிரியைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனை பயன்படுத்துவதனால் பசி ஏற்படுவதைக் குறைத்து, வயிறு நிரம்பியுள்ளதான உணர்வைக் கொடுக்கும்.

ஆனால் சில ஆய்வுகளில் ஆப்பிள் சிடர் விநாகிரி பயன்படுத்துவதனால் குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக உறுதி செய்துள்ளனர்.

இதில் பக்டீரியா, பூஞ்சை தொற்றுக்களிற்கு எதிராக செயற்படும் தன்மை இருப்பதனால் பாதத்தின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

இது இரத்த அழுத்தம், கொழுப்பின் அளவு, புற்றுநோய்களுக்கான வாய்ப்புக்களை குறைக்கிறது.

இது ஸ்டார்சை சமிபாடடையச் செய்து நீரிழிவு நோயாளர்களிற்கு ஆரோக்கியத்தை தருகிறது.

நீங்கள் இந்த மருந்துகளை பயன்படுத்தினால் ஆப்பிள் சிடர் விநாகிரியை தவிர்க்க வேண்டும்.

1. Digoxin or lanoxin.

இந்த மருந்துகளுடன் ஆப்பிள் சிடர் விநாகிரியை பயன்படுத்தினால் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படுவதுடன், வாந்தி, பார்வைப் பிரச்சினை, தலைச் சுற்று போன்றன ஏற்படும்.


2. Diuretics(lasix, thalitone, diuril, and microzidea)

இந்த மருந்துகள் உடலில் தேவையற்ற நீர் தேங்காமல் வெளியேற்ற உதவுகிறது.

ஆனால் ஆப்பிள் சிடர் விநாகிரியை பயன்படுத்துவதனால் பொட்டாசியம் அளவு குறைந்து உடல் வறட்சியை ஏற்படுத்துகிறது.

இன்சுலீன்.

இன்சுலீன் உடலில் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஆனால் ஆப்பிள் சிடர் விநாகிரி குளுக்கோஸ் அளவை சமநிலைப் படுத்தும்.
ஆப்பிள் சிடர் விநாகிரி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டியவர்கள்.

• கர்ப்பினிப் பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் ஆப்பிள் சிடர் விநாகிரியை தவிர்க்க வேண்டியது அவசியம். ஏனெனில் இவை கருவிற்கும், குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புக்கள் உள்ளன.

• மாதவிடாய்காலங்களில் பயன்படுத்தினால் எலும்புகளின் வலிமையைக் குறைப்பதனால் எலும்பு தேயும் நோய் ஏற்படும்.

• நீரிழிவு நோயாளர்களிற்கு பாதிப்பை அதிகப்படுத்தி விடுகிறது.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!