நடனம் ஆடியதற்காக இளம் பெண் அதிரடியாக கைது… எங்கு தெரியுமா..?


ஈரானில் தான் நடனமாடும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதற்காக ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈரானைச் சேர்ந்த மதே ஹோஜப்ரி என்ற பெண் தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தள பக்கத்தில் தான் நடனமாடும் வீடியோக்களைப் பதிவிட்டுள்ளார். இதன் இதை ஒரு குற்றமாகக் கருதி அந்நாட்டு போலீசார் அவரைக் கைது செய்து பின் விடுவிக்கப்பட்டார்.

இதனைக் கண்டித்து சமூக வலைத்தளங்களில் ஈரான் போலீசுக்குக் கண்டனம் தெரிவித்து பதிவிட்டு வருகிறார்கள். பலரும் #DancingIsNotACrime என்ற ஹேஷ்டேக் உடன் தாங்கள் நடனமாடும் வீடியோவைப் பகிர்ந்து வருகிறார்கள்.

உலகம் சிரிக்கும்:

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரானிய எழுத்தாளர் ஹோசைன் ரொனாகி, “குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் எல்லாம் சதந்திரமாகத் திரியும்போது, நடனமாடுவதற்காக பெண் கைது செய்யப்படுவதைப் பார்த்து உலகமே சிரிக்கும்.” என்று கூறியுள்ளார்.

هر جای دنیا بگویی که دختران ۱۷ و ۱۸ ساله را بخاطر رقص، شادی و زیبایی‌شان به جرم اشاعه فحشا بازداشت و زندانی کردند و در مقابل متجاوزان به کودکان و … آزاد هستند، می‌خندند! چون برای‌شان باور پذیر نیست!#مائده_هژبری #رقص#آزادی

8:25 PM – Jul 7, 2018
6,375
1,156 people are talking about this
Twitter Ads info and privacy
கைதுக்கு பின் விடுதலையான ஹோஜப்ரி புன்னகையுடன் ஒரு படத்தைப் பதிவிட்டு, “ஒரு கவர்ச்சிகரமான பெண்ணிடம் இந்தப் புன்னகை எப்போதும் இருக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

பெண்களுக்குக் கட்டுப்பாடு

ஈரான் அரசு பெண்கள் ஆடை அணிவதற்கும் ஆண்களுடன் நடனமாடுவதற்கும் கடுமையான கட்டுப்பாடு விதித்துள்ளது. தன் குடும்பத்தைச் சேர்ந்த நெருங்கிய உறவினரைத் தவிர மற்றவர்களுடனோ அல்லது மற்றவர்கள் முன்போ நடனமாடுவது குற்றம் என்று அந்நாட்டு அரசு கருதுகிறது. ஹோஜப்ரி பதவிட்ட வீடியோக்களில் பெண்கள் கட்டாயம் அணிய வேண்டிய பர்தா அணியவில்லை என்பதும் அவர் கைதுக்கான காரணமாகக் கூறப்படுகிறது.-Source: tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!