இந்த பானத்தை குடிப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்! நச்சுகள் கூட வெளியேறும்…!


தேனின் மருத்துவ குணங்களையும் எலுமிச்சப்பழத்தின் சிறப்புக்களையும் பல ஆரோக்கிய அறிக்கைகளில் அறிந்துள்ளீர்கள்.

நம் முன்னோர்கள் ஜலதோக்ஷம், காய்ச்சலை குணப்படுத்துவதற்கு எலுமிச்சப் பழத்தையும் தேனையும் சிறப்பான முறையில் பயன்படுத்தி வந்துள்ளனர்.

ஆனால் தேன், எலுமிச்சப்பழத்தின் சிறப்புக்களை முழுமையாக அறிந்ததில்லை என்பதே உண்மை.
தேன்.

தேனிடம் காணப்படும் தொற்றுக்களிற்கு எதிராக செயற்படும் ஆற்றலினால் ஜலதோக்ஷம் காய்ச்சலிற்கு சிறந்த தீர்வைத் தருவதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்தி நோய்கள் ஏற்படும் போது அதனை குணப்படுத்தும் தன்மை கொண்டுள்ளது.

எலுமிச்சப்பழம்.

இதில் காணப்படும் அதிகப்படியான விட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த உதவுகின்றது.

தேனும் எலுமிச்சப்பழமும் காய்ச்சல், ஜலதோக்ஷத்தை குணப்படுத்துவது எப்படி?

அடிக்கடி காய்ச்சல், ஜலதோக்ஷத்தால் பாதிக்கப்பட்டால் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலிமை இழந்து விடும்.

இதற்காக பயன்படுத்தும் மருந்து வகைகளும் உடலின் ஆரோக்கியத்தை நலிவடையவே செய்கின்றன.

ஆனால் தினமும் காலையில் வெறு வயிற்றில் தேனும் எலுமிச்சப்பழச் சாறு கலந்த நீரினை அருந்தி வந்தால் காய்ச்சல், ஜலதோக்ஷத்தில் இருந்து விடுதலை பெறுவதுடன் உடலின் முழு ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றது.


எலுமிச்சப்பழம் தேன் கலந்த பானத்தால் கிடைக்கும் நன்மைகள்.

• காபி, டீ குடிக்கும் பழக்கத்தை நிறுத்தி இந்தப் பானத்தை குடிப்பதனால் சிறந்த சக்தி கிடைக்கும்.

• இதில் சிறு நீரை வெளியெற்றும் தன்மை கொண்டதனால் இலகுவாக உடலில் இருந்து
தேவையற்றவற்றை நீக்குவதுடன் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வராமல் தடுக்கும்.

• தேன் கொலாஜன் உருவாக்கத்தை அதிகரிக்கச் செய்வதுடன், எலுமிச்சப்பழச் சாறு இரத்த ஓட்டத்தை

• சுத்தப்படுத்தி சீராக்குகின்றது, இதனால் சருமம் பொலிவாக காணப்படும்.

• மேலும் உடல் எடையைக் குறைப்பதற்கு விரைவாகச் செயற்படும்.

தேன் எலுமிச்சப்பழ பானத்தை தயாரிக்கும் முறை.

• எலுமிச்சப்பழத்தை வெட்டி ஒரு கோப்பையில் சாற்றினை எடுத்துக் கொள்ள வேண்டும்.

• அதில தேன் ஒரு தேக்கரணடியும் சூடான நீரையும் சேர்க்கவும்.

• இரண்டும் ஒன்றுடன் ஒன்று நன்றாக சேரும் வரை கலக்கவும்.

இந்தக் கலவையை தினமும் காலை உணவிற்கு முன்பாக வெறு வயிற்றில் குடிப்பதனால் ஒரு வாரத்திலேயே நோய் எதிர்ப்பு சக்தி வலிமை அடைய ஆரம்பிப்பதுடன் உடலின் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!