தர்ப்பூசணி சாப்பிடும் போது விதைகளை துப்புகிறீர்களா…? இத படிங்க முதல்ல அப்பறம் பாருங்க..!


நீங்கள் தர்ப்பூசனி சாப்பிடும் போது அதன் விதைகளை துப்புகிறீர்களா? உடனே அந்தப்பழக்கத்தை மாற்றி விதையுடன் சேர்த்து சாப்பிடுவதனால், விதையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்.

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றது.

தர்ப்பூசனி புத்துணர்ச்சி தரும் பழமாக இருப்பதுடன் அதில் உள்ள விதைகளில் பல ஊட்ட்ச்சத்துக்களும் ஆண்டிஒக்ஸிடன் தன்மையும் நிறந்துள்ளது.

இதில் அதிகளவில் அமினோஅமிலம், புரோட்டின், விட்டமின் பி, மக்னீசியம், சிங், இரும்பு, பொட்டாசியம், மங்கனீஸ், செம்பு போன்றவை காணப்படுகின்றது.

இதில் நல்ல கொழுப்புக்களும், ஒமேகா-3, ஒமேகா-6 கொழுப்பமிலமும் செறிந்துள்ளது. இதனை பழத்துடன் சேர்த்து அல்லது சாலட்களில் சேர்த்து சாப்பிடவும் முடியும்.

தர்ப்பூசனின் விதை மட்டுமல்லாது அதில் இருந்து தயாரிக்கும் எண்ணெய்யும் உடலிற்கு ஆரோக்கியத்தை தருகின்றது.

தர்ப்பூசனி விதையினால் கிடைக்கும் நன்மைகள்.

1. இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

இதயத்தின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கை வகிக்கும் கனியுப்பான மக்னீசியம் விதைகளில் காணப்படுவதனால், இரத்த அழுத்தத்தை சீராக்கி இதயத்தை சிறப்பாக செயற்படுத்த உதவும்.

2. ஆண்களில் இனவிருத்தியை அதிகரிக்கச் செய்யும்.

இதில் உள்ள சிங் ஆண்களின் இன விருத்தி உறுப்பில் ஆரோக்கியமான் விந்துக்களை உருவாக்குவதற்கு உதவுகின்றது.

அத்துடன் இதில் உள்ள மங்கனீஸ் ஆண்களின் இன விருத்தி உறுப்பிற்கு ஆரோக்கியத்தை வழங்குகின்றது.


3. நோய் எதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்தும்.

இதில் காணப்படும் விட்டமின் பி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றது.

4. நீரிழிவு நோயைக் குணப்படுத்தும்.

இவை உடலில் glycogen படிவதை தடுப்பதனால் நீரிழிவு நோயில் இருந்து பாதுகாக்கின்றது.

5. சமிபாட்டை அதிகரிக்கும்.

விதைகளில் உள்ள மக்னீசியம் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கான நொதிகளின் செயற்பாட்டை அதிகரிக்கச் செய்வதுடன், சமிபாட்டிற்கு உதவி வயிற்றுப் பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கின்றது.

6. சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

தர்ப்பூசனி விதைகளில் உள்ள மக்னீசியம் cortisol அளவை குறைப்பதுடன், ஹார்மோன்களை சமநிலைப் படுத்தி, கலங்களின் செயற்பாட்டை அதிகரிக்கச் செய்கின்றது. இதனால் சிறந்த சரும கட்டமைப்பை பேண உதவுகின்றது.

7. மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

மக்னீசியம் ஞாபக ச்க்தியை அதிகரிப்பதுடன் மூளையின் செயற்பாட்டை தூண்டுகின்றது.

இது அல்சைமர் நோயினை குணப்படுத்தவும் உதவுகின்றது.

8. உடல் வளர்ச்சியையும் விருத்தியையும் அதிகரிக்கச் செய்யும்.

இதில் காணப்படும் அமினோஅமிலங்கள் மற்றும் புரோட்டின் உடல் வளர்ச்சிக்கும் அதன் விருத்திக்கும் கை கொடுக்கின்றது.

9. எலும்பு தேய்வடைவதை தடுத்தல்.

இதில் அதிகளவான கனியுப்புக்கள் காணப்படுவதனால் எலும்புகளில் கனியுப்புக்களின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்வதுடன் அதனி வலிமையாக்குகின்றது.

இதனால் எலும்புகள் தேய்வடைவதை தடுக்க முடியும்.

10. கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும்.

இதில் அதிகளவான கொழுப்புகள் காணாப்படுகின்றது. இவை உடலில் இதய நோய்களை ஏற்படுத்தும் கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்கின்றது.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!