அலுவலகத்தில் உடல் எடையை குறைப்பது எப்படி..? கவலை வேண்டாம்! இப்படி செய்தாலே போதும்…!


நீங்கள் அணைவரும் தினமும் பாதி நாட்களை உங்கள் அலுவலகத்திலேயே செலவிடுகிறீர்கள்.

அதிகமாக 7 முதல் 9 மணி நேரங்கள் வேலை செய்வதனால் அதிகம் உடகார்ந்திருத்தல் மேசையில் வைத்தே உணவை எடுத்துக் கொள்லுதல் போன்ற பல செயறொபாடுகளால் உடலிற்கு உடற்பயிற்சி கிடைப்பதில்லை.

இதனால் ஆரோக்கியத்திற்கு கேடு விளைகின்றது.

மேசையிலே உட்கார்ந்து செய்யும் வேலைகளினால் உடல் எடை அதிகமாவதுடன் இன்றைய வேலை முறைகள் மன அழுத்தத்தையும் கொடுக்கின்றது.

தொடர்ச்சியாக உட்கார்ந்து வேலை செய்வதனால் மெட்டபோலிசம் குறைவடைந்து, உடல் எடை அதிகரிப்பதுடன், இதய நோய்கள், வாதங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன.

அலுவலக வேலையின் போது சிலவற்றை கவனத்தில் எடுத்துக் கொண்டால் உடல் எடையைக் குறைப்பதுடன் ஆரோக்கியத்தையும் பேணுகின்றது.

அலுவலகத்தில் உடல் எடையை குறைப்பது எப்படி?

1. அதிகமாக நீரை அருந்துதல்.

வேலை தளத்தில் அதிகமாக நீரை அருந்தும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதனால் சோம்பலை நீக்கி, உடல் வறட்சி, தலை வலி போன்றவை வராமல் தடுப்பதுடன் தேவையற்ற உணவுகள் உட்கொள்வதற்கான வாய்ப்புக்கள் குறைவடிகின்றது.

வேலைத் தளத்தில் பெண்கள் 2.7 லீட்டர், ஆண்கள் 2.8 லீட்டர் நீர் அருந்துவதனால் உடலிற்கு சக்தி கிடைக்கின்றது.

2. அசைமிட்டாய் மெல்லுதல்.

அசை மிட்டாய்களை மெல்லுவதனால் வேலை நேரங்களில் எச்சரிக்கையாக இருக்க முடிவதுடன், பதட்டம், மன அழுத்தம், salivary cortisol போன்றவற்றை குறைவடையச் செய்கின்றது.

Salivary cortisol ஹார்மோன் வயிற்றுப் பகுதிகளில் கொழுப்பை படிவடையச் செய்வதற்கு உதவுகின்றது.

3. வீட்டிலிருந்து உணவினை எடுத்து செல்லுதல்.

உணவு வேளைகளில் கலோரிகள் அதிகமுள்ள துரித உணவுகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை வீட்டில் தயார் செய்து எடுத்துச் செல்வது சிறந்தது.


4. கிறீன் டீ அருந்துதல்.

உடலிற்கு சக்தியை அதிகப்படுத்துவதற்கு காபி, டீ குடிப்பதை தவிர்த்து கொழுப்பைக் கரைக்க கூடிய கிறீன் டீயினை குடிப்பதனால் சக்தி கிடைப்பதுடன் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

5. படிக்கட்டுக்களை பயன்படுத்தல்.

வேலைத் தளத்தில் மின்தூக்கிகளை பயன்படுத்துவதை தவிர்த்து படிக்கட்டுக்களை பயன்படுத்துவது கலோரிகள் நிறைந்த உணவை குறைப்பதற்கு சமமானது. இதனால் உடல் எடை இலகுவாக குறைக்க முடியும்.

6. நிற்றல்.

உட்கார்ந்து இருப்பதை விட நிற்பதனால் ஒரு மணி நேரத்திற்கு 50 கலோரிகள் குறைவடையும். அத்துடன் இரத்த குளுக்கோஸ் அளவை சீராக்குவதுடன் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் செய்கின்றது.

7. உணவுகளிற்கு இடையில் சாலட் எடுத்துக் கொள்ளுதல்.

உணவு வேளைகளிற்கு இடையில் அல்லது உணவு வேளைகளின் போது ஆரோக்கியமான சாலட்களை எடுத்துக் கொள்வது சிறந்தது.

8. சீயா விதைகளை வைத்திருத்தல்.

மேசை வேலை செய்பவர்கள் ஒரு பெட்டியில் சீயா விதைகளை வைத்திருப்பதனால் அதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பமிலம், நார்ப் பொருள், புரோட்டின், கல்சியம் இலகுவாக உறிஞ்சுக் கொள்வதனால் உடல் எடை அதிகமாக வைத்திருக்க உதவும்.

9. ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 2 நிமிடங்கள் நடத்தல் வேண்டும்.

தொடர்ச்சியாக உட்கார்ந்து வேலை செய்பவர்கள் ஒரு மணிநேரத்திற்கு 2 நிமிடங்கள் நடப்பது சிறப்பானது.

10. ஆரோக்கியமான சிற்றூண்டிகளை உட்கொள்ளுதல்.

வேலைத் தளத்தில் பசியினை உணரும் போது முழு தாணிய உணவுகள், ஆப்பிள், வாழப்பழம் போன்றவற்றை சாப்பிடுவது சிறந்தது.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!