தினமும் இளநீரை குடிப்பதால் என்ன நன்மை? தெரிஞ்சுக்கிட்டால் குடிக்காமல் இருக்க மாட்டீங்க…!


இளநீர் இயற்கையான சிறந்த பான வகை. இதில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.

சுவையான இளநீர் கலோரிகள் அற்றதாகவும், விட்டமின் சி, பி, கல்சியம், இரும்பு, மக்னீசியம், மங்கனீஸ், அமினோஅமிலம் போன்ற ஊட்டச்சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

இளநீரினை அருந்துவதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், வயது முதிர்வடைவதை குறைத்து புற்றுநோய் போன்ற பல நோய்கள் வராமல் பாதுகாக்கின்றது.

இளநீரினால் உடலிற்கு கிடைக்கும் நன்மைகள்.

1. உடலின் pH அளவை சமநிலை படுத்தும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை, மாப்பொருட்கள் போன்றவற்றை அதிகம் உட்கொள்வதனால் உடலில் அமிலத் தன்மை ஏற்படுகின்றது. இளநீரினை குடிப்பதனால் அமிலத் தன்மையை இலகுவாக குறைக்க முடியும்.

2. இரத்த அழுத்தத்தைச் சீராக்கும்.

இதில் காணப்படும் அதிகளவான மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகின்றது.


3. தலைவலியை நீக்கும்.

உடல் வறட்சியடைவதனால் தலைவலி ஏற்படுகின்றது. இளநீரில் அதிகளவான கனியுப்புக்கள் இருப்பதனால் வறட்சியை நீக்கி தலைவலியை குணப்படுத்தும்.

4. இரத்தத்தில் குளுக்கோஸின் அளவைச் சீராக்கும்.

இதில் காணப்படும் அதிகளவான அமினோஅமிலம் மற்றும் நார்ப் பொருட்களினால் இரத்த குளுக்கோஸ் அளவை சீராக்கி நீரிழிவு நோயினை தடுக்கும்.

5. சிறுநீரக வெளியேற்றத்தை அதிகரிக்கச் செய்யும்.

சிறுநீரின் உருவாக்கத்தை அதிகரிக்கச் செய்வதுடன் அதன் அமிலத் தன்மையும் குறைத்து சிறுநீர் அதிகமாக வெளியேறுவதற்கு உதவுகின்றது.

2 கோப்பை இளநீரில் சிறிதளவு உப்பைச் சேர்த்து குடிப்பதனால் சிறுநீரக சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மற்றும் பக்டீரியா தொற்றுக்களை குணப்படுத்த வல்லது.

6. இதயத்தின் ஆரோக்கியத்திற்கு உதவும்.

இளநீரில் கொழுப்பு காணப்படுவதில்லை. இதனால் இதயநோய்கள் வருவதற்கான வாய்ப்புக்கள் குறைவு அத்துடன் இது நல்ல கொழுப்பை உருவாக்க உதவுவதுடன் இரத்த ஓட்டத்தை சீராக பேணுகின்றது.


7. உடல் வறட்சியை நீக்கும்.

எலக்ரோலைட்ஸ் அதிகம் காணப்படுவதனால் உடல் வறட்சியை போக்குவதுடன் வாந்தி, வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்படும் போது சக்தி தரும் பானமாக பயன்படுத்த முடியும்.

8. வயதடைவதை தடுக்கும்.

இளநீரில் உள்ள cytokines சருமத்திற்கு தேவையான ஊட்டத்தினை அளித்து வயதடைவதை தடுக்கின்றது, 2 தேக்கரண்டி சந்தனப் பவுடருடன் ஒரு கப் இளநீரினைச் சேர்த்து சருமத்தில் பூசி, உலர்ந்த பின்பு அதனை அகற்றுவதனால் சிறந்த பலன் கிடைக்கும்.

9. மதுபான பாவனையினல் ஏற்படும் பிரச்சினைகளை தடுக்கும்.

மதுபானத்தை அதிகம் உட்கொள்வதனால் உடல் வறட்சி அடைவதுடன், குமட்டல், வாந்தி போன்றனவும் ஏற்படுகின்றது.

மேலும் இதனால் ஏற்படும் மன அழுத்ததை குணப்படுத்த இளநீரை பயன்படுத்த முடியும்.

10. உடல் எடையை குறைக்க உதவும்.

இது கலோரி குறைந்த பானமாக இருப்பதுடன் சமிபாடு, மெட்டபோலிசம் செயற்பாட்டை அதிகப்படுத்தும் நொதிகளையும் கொண்டுள்ளதனால் உடல் எடையை இலகுவாக குறைக்கின்றது. – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!