வயிற்றில் சில நிமிடங்கள் இப்படி மசாஜ் செய்தால் கொழுப்பைக் குறைக்க முடியுமா..?


அதிகமான உணவுகளை உட்கொள்வதனாலும், வயிற்றுப் பகுதிகளில் கொழுப்புக்கள் சேர்வதனாலும் வயிறு பெரிதாக தோற்றமளிக்கின்றது.

நாம் உண்ணும் உணவுகளின் தன்மையாலும், சமைக்கப்படும் முறையினாலும், சாப்பிடும் நேரத்தின் வேறுபாட்டினாலும் வயிறு ஊதிப் போகின்றது.

ஆனால் இவற்றை இலகுவாக கட்டுப்படுத்த முடியும்.

நீங்கள் இந்த முறையினை கடைப்பிடித்தால் கடினமான உணவு முறையை பின்பற்றாமலேயே வயிற்றைக் குறைக்க முடியும்.

இயற்கை முறை

தொப்புளிற்கு மேலுள்ள வயிற்றுப் பகுதியினை கைகளில் உள்ள நான்கு விரல்களை பயன்படுத்தி வட்ட வடிவில் 2-3 நிமிடங்கள் மசாஜ் செய்யவும்.

பின்பு மசாஜ் செய்யும் திசையை மாற்றி 3 நிமிடங்கள் வரை மீண்டும் நன்றாக மசாஜ் செய்து கொள்ளவும்.

இதனால் வயிற்றுப் பகுதியில் சேர்ந்துள்ள வாயுக்களை வெளியேற்ற முடியும்.

தேங்கியுள்ள நீரினை வெளியேற்றுவதற்கு இந்த மசாஜ் முறையினை தொப்புளை சுற்றி செய்யவும்.

மசாஜ் செய்யும் போது விரல்களினால் அதிகளவான அழுத்தத்தை கொடுக்கவும். ஆனால் இந்த முறையில் வலிகள் ஏற்படாது.

கீழ் வயிற்றுப் பகுதியில் இந்த மசாஜ் செய்வதனால் அதிகரித்த எடையைக் குறைக்க முடியும். மேலும் சில வழி முறைகள்.

• எலுமிச்சப்பழ நீருடன் நாளை தொடங்கவும்.- காலை உணவிற்கு முன்பாக விட்டமின் சி உட்கொள்வதனால் வயிற்றின் தொழிற்பாட்டை சீராக்கும்.

• சாப்பிடும் போது பானங்களை அருந்துவதை தவிர்த்தல்.- சாப்பிடும் போது பானங்களை எடுத்துக் கொள்வதனால் சமிபாட்டில் மந்த நிலை ஏற்பட்டு வயிற்றை ஊதச் செய்கின்றது.

• வெறு வயிற்றில் மது பானங்களை உட்கொள்ளவதை தவிர்த்தல்.- இவ்வாறு செய்வதனால் சமிபாட்டை தடுப்பதுடன் குடலில் இருக்கும் உடலிற்கு தேவையான நுண்ணங்கிகளை அழித்து விடும்.

• இஞ்சி தேநீரை அருந்த வேண்டும்.- இஞ்சி தேநீர் உணவு ஓட்டத்தை மேம்படுத்தி வாயுக்கள் உருவாகாமல் தடுக்கின்றது.

• மெதுவாக மென்று சாப்பிடுதல் அவசியம்.- விரைவாக சாப்பிடும் போது அதிகளவான வாயுக்களை உள்ளெடுக்கின்றோம். இதனால் வயிறு உப்பி விடுகின்றது.

• ஓய்வு- தினமும் 15 நிமிடங்கள் சுத்தமான காற்றுள்ள பகுதியில் தியானம் செய்வதுடன் நடை பயிற்சி எடுத்துக் கொள்வதும் சிறந்தது.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!