இரத்தசோகையை குணப்படுத்த இப்படியொரு மருத்துவமா? இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே…!


ஆரோக்கியமான சிவப்பு இரத்த அணுக்கள் உடலில் குறைவடைவதனால் இரத்தச் சோகை ஏற்படுகின்றது.

சிவப்பு இரத்த அணுக்கள் ஒக்ஸிஜனை உடலிற்கு கொண்டு செல்லும் ஊடகமாக செயற்படுவதனால் இவை குறைவடையும் போது உடலில் உள்ள கலங்களிற்கு தேவையான ஒக்ஸிஜன் கிடைப்பதில்லை.

இரத்தசோகை எல்லோருக்கும் வரும் பொதுவான நோய். இரத்தசோகை பரம்பரையாகவும் வருவதற்கான வாந்ப்புக்கள் உள்ளதனால், தாயிடம் இருந்து குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுத்துவதுடன், மேலும் பல காரணிகளால் இரத்தசோகையினால் பாதிக்கப்படுகின்றனர்.

போதியளவு ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளாமை, மற்றும் ஒருவரது மருத்துவ நிலையினால் இரத்தசோகை ஏற்படும்.

அதிகமான இரத்த இழப்பு, இரத்த சிவப்பு அணுக்கள் உருவாகும் அளவு குறைவடைதல், இரத்த அணுக்கள் அழிவடைதல் போன்றவற்றாலும் இரத்தசோகையால் பாதிக்கப்படுகின்றனர்.

இரத்தசோகை ஏற்பட்டதற்கான அறிகுறிகள்.

• சோர்வு, தலைச்சுற்று, மயக்கம் போன்றன ஏற்படும்.

• இரத்த அழுத்தம் குறைவடையும்.

• நெஞ்சு படபடப்பு, இதயத்துடிப்பு வீதம் அதிகமாதல், நெஞ்சு வலி, இதயத்தில் ஒக்ஸிஜன் அளவு குறைவடைதல், மாரடப்பு போன்றன ஏற்படலாம்.

• கல்லீரல் விரிவடைதல்.

• குடலில் கழிவுகளின் நிறம் மாற்றமடைதல்.

• தசைகள் தளர்வடைதல்.

• மூச்சு விடும் போது கடினமாக இருத்தல்.

•சருமம் வெளிருவதுடன் குளிர்வடைந்து மஞ்சள் நிறமாக மாறுதல்.

• கண்கள் மஞ்சள் நிறமடைதல்.

இரத்த அணுக்கள் குறைவடைவதனால் உடலிற்கு தேவையான ஒக்ஸிஜனை விநியோகிக்க முடியாது.

எனவே இந்த ஆபத்துக்களை தவிர்ப்பதற்கு தேவையான ஊட்டச்சத்துகளை உணவுகள் மூலம் எடுத்துக் கொள்வதனால் இரத்த சோக்கையை குணப்படுத்த முடியும்.

இரத்தசோகயை குணப்படுத்தும் உணவுகள்.

1. கீரை வகை.

பச்சை இலை வகைகள் உடலிற்கு தேவையான ஊட்டச்சத்தினை வழங்குகின்றது. கீரை வகையில் அதிகளவான இரும்புச்சத்து, விட்டமின் பி12 மற்றும் போலிக் அமிலம் உள்ளது. உடலிற்கு அக்தியைத் தரும் ஊட்டச்சத்துக்கள் காணப்படுவதனால் இரத்த சோகையை குணப்படுத்தலாம்.

கீரை சூப்பினை சாப்பிடுவதனால் தினமும் உடலிற்கு தேவையான 30 வீத இரும்புச்சத்தையும், 33 வீத போலிக் அமிலத்தையும் பெற்றுக் கொள்ளலாம்.

கீரை சூப்பினை தயாரிப்பதற்கு ஒருன் கப் வெளிறிய கீரையுடன் சிறிதளவு நீரைச் சேர்த்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெட்டப்பட்ட பூண்டு, வெங்காயத்தை சிறிதளவு எடுத்து அத்துடன் ஒரு தேக்கரண்டி ஓலிவ் எண்ணெய்யை சேர்க்கவும்.

அந்தப்பாரத்தில் கீரை மற்றும் உப்பினை கலந்து 5-10 நிமிடங்கள் சமைத்தால் சூப் தயாராகி விடும். அத்துடன் ஒரு தேக்கரண்டி தெனை சேர்த்தால் சுவையை அதிகப்படுத்தலாம்.

2. எள்ளு.

இரத்த சோகை குறைபாட்டினை இரும்புச் சத்தினால் நிவர்த்தி செய்ய முடியும். தினமும் உடலிற்கு ய்ஜேவையான இரும்புச்சத்தில் 30 வீதம் ¼ கப் எள்ளில் உள்ளது.

3. பீற்றூட்.

இரும்புச் சத்து குறைபாட்டினாலே அதிகமாக இரத்த சோகை ஏற்படுகின்றது. பீற்றூட்டில் அதிகளவான இரும்புச் சத்து, நார்ப் பொருட்கள், கல்சியம், பொட்டாசியம், சல்பர் மற்றும் விட்டமின் காணப்படுகின்றது.

பீற்றூட்டை உட்கொள்வதனால் உடலை சுத்தன்மாக வைத்திருப்பதுடன், உடலிற்கு தேவையான ஒக்ஸிஜனை வழங்குதல், சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தல் போன்ற பல நன்மைகளைச் செய்கின்றது.

4. ஆப்பிள்.

ஆப்பிள் தினமும் சாப்பிடுவதனால் மருத்துவரிடம் செல்ல தேவையில்லை. ஆப்பிளில் அதிகளவான இரும்புச்சத்து காணப்படுவதனால் இரத்த சோகையில் இருந்து நிவாரணத்தை தருகின்றது.

பச்சை ஆப்பிளை தோலுடன் சாப்பிடுவதனால் உடலிற்கு பல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன.
ஆப்பிளை பிளண்டரில் அரைத்து பானமாகவு அருந்த முடியும்.
5. வாழைப்பழம்.

வாழப்பழத்தில் உள்ள மக்னீசத்தினால் இரத்த சிவப்பு அணுக்களின் உருவாக்கத்தை தூண்டுவதுடன் அவற்றிற்கு தேவையான நொதிப் பொருட்கலின் உருவாக்கத்தையும் தூண்டுகின்றது.

இரத்த சோகையில் இருந்து நிவாரணத்தை தரும் உணவுகளை தினமும் உட்கொள்வதனால் உங்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும்.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!