வயிறு, சிறுகுடல், எலும்புகளில் ஏற்படும் வலி, வீக்கத்தை குறைக்கும் அற்புதமான பழம்..!


பெர்ரி உடலிற்கு நன்மையை செய்யக் கூடிய ஆரொக்க்கியமான சிறப்பு நிறைந்த பழ வகை. இதில் சமிபாட்டு தொகுதிக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்தாகிய நார்ப் பொருட்களாஇ அதிகளவில் கொண்டுள்ளது.

இதில் உள்ள Anthocyanin எனும் ஆண்டிஒக்ஸிடன் இவை சிவப்பு, நீலம், ஊதா நிறத்தில் இருப்பதற்கு காரணமாகின்றது.

அத்துடன் வைரஸ், வீக்கம் மற்றும் புற்றுநோய்க்கு எதிராக செயற்படும் ஆற்றல் உள்ளது.

இது மிகவு ஆரோக்கியமான உணவு, அதனை Super food எஅனவும் கூறுவார்கள். பெர்ரியில் கலோரிகள் குறைவாகவும் பலருக்கு பிடித்த பழமாகவும் உள்ளது.

ராஸ்பெர்ரியில் செறிந்துள்ள Ellagic அமிலம் எனும் phenolic compound புற்றுநோய்க்கு எதிராக செயற்பட உதவுகிறது.

ராஸ்பெர்ரியில் அதிகளவான anthocyanin, ellagic acid, quercetin, catechins, pelargonidin salicyclic acid போன்றவை காணப்படுகின்றன.

மேலும் இதில் விட்டமின் சி, மங்கனீஸ், சமிபாட்டிற்கு உதவும் நார்ப் பொருள் காணப்படுவதுடன் விட்டமின் பி, போலிக் அமிலம், செப்பு, இரும்பு சத்துக்களும் செறிந்துள்ளது.

ராஸ்பெர்ரியின் மருத்துவ நன்மைகள்.

1. தொற்றுக்கள் மற்றும் புற்றுநோயைத் தடுக்கும்.

ராஸ்பெர்ரியின் நிறத்திற்கு காரணம் அதில் உள்ள Anthocyanin, இவை தொற்றுக்களை ஏற்படுத்தும் பூஞ்சை, பக்டீரியாக்களை வளர விடாமல் தடுப்பதுடன் வேறு பல தொற்றுக்களில் இருந்து உடலை பாதுகாக்கின்றது.


2. கண்ணின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

இதில் அதிகளவான ஆண்டிஒக்ஸிடன் காணப்படுவதனால் கண்ணின் ரெட்டினா பகுதியை ஒக்ஸிசன் தாக்கத்தின் மூலம் அழுத்தம் அடையாமல் பாதுகாக்கின்றது.

இதில் உள்ள Elaagic அமிலம் கண் பார்வையை பாதிக்கும் காரணிகளுக்கு எதிராக செயற்படும் காரணிகளை அழிக்க உதவுவதுடன் அவற்றை குணப்படுத்தவும் கை கொடுக்கின்றது.

3. வீக்கத்தை கட்டுப்படுத்தும்.

வயிறு, சிறுகுடல், எலும்புகளில் ஏற்படும் வலி, வீக்கத்தை குறைப்பதுடன், இலகுவாக அவற்றை குணப்படுத்தவும் செய்கின்றது.

4. உடல் எடையை குறைப்பதற்கு உதவும்.

ராஸ்பெர்ரி உடலில் கொழுப்பு படிவதை குறைப்பதன் மூலம் உடல் எடையைக் குறைக்க உதவுகின்றது.

இது கொழுப்பு குறைந்த உணவு வகை அத்துடன் இதனை சாப்பிட்டால் நீண்ட நேரத்திற்கு பசி இருக்காது.

இவை உடல் அதிகமான கொழுப்பை உறிஞ்சுவதை தடுக்கின்றது.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!