மறந்தும் கூட இரவில் மட்டும் இந்த உணவை மட்டும் சாப்பிடாதீர்கள்…!!


இரவு நேரம் பணிபுரிகின்றவர்கள் வழக்கமாக தூங்கும் நேரத்தையும், வழக்கமாக உண்ணும் நேரத்தையும் மாற்றிக் கொள்வதால் பெருமளவு பாதிக்கப்பட்டு, உடல் பாதிப்பால் நிம்மதியிழக்கின்றனர்.

பெரும்பாலான இளைஞர்களுக்கு அடிக்கடி ஏப்பம் வரும். இந்த கரித்த, புளித்த ஏப்பம் ஓர் எச்சரிக்கை அறிகுறியாகும்.

மன உளைச்சல், தூக்கமின்மை, நேரம் தவறி காரமாக, கடினமாக உண்ணப்படும் செயற்கையுணவுகள் எல்லாம் சேர்ந்து வயிற்றுப் புண்ணை உண்டாக்கியுள்ளது (அல்சர்) என்பதே அதன் பொருள்.

எனவே, நீங்கள் கட்டாயம் கீழ்கண்டவற்றைப் பின்பற்றி உடல் நலத்தையும், உளநலத்தையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.


பகல் நேர வேலையோ இரவுநேர வேலையோ உண்ணும் நேரத்தைச் சரியாக வைத்துக் கொள்ளுங்கள். காலை 8 முதல் 9, மதியம் 12.30 முதல் 1.30, இரவு 7.30 முதல் 8.30.

தினம் ஒரு மாதுளம்பழம் தவறாது சாப்பிடுங்கள்.

நாட்டு மருந்துக்கடையில் அதிமதுரம் பொடியை வாங்கி, அதில் ஒரு ஸ்பூன் எடுத்து அத்துடன் தேன் சேர்த்து குழைத்துச் சாப்பிட்டால் குடல் புண் ஆறும். இருமல் சளி அகலும். அதிமதுரம் மலிவானபொருள்.

வாரம் ஒருமுறை மணத்தக்காளி கீரை பருப்பு சேர்த்து சாப்பிடுங்கள் பொன்னாங்கண்ணி கீரை வாரம் ஒருமுறைச் சாப்பிடுங்கள், உடலும் கண்ணும் குளிர்ச்சியடையும் அல்சர் வராது.

இரவு மிகுந்த சோற்றில் நீர் ஊற்றி சிறிய வெங்காயத்தை வெட்டிப் போட்டு, காலையில் அதை அப்படியே மென்று சாப்பிடுங்கள். வாரம் இரு நாடகளாவது இப்படிசாப்பிடுங்கள். உடல் சூடு தணிந்து வயிற்றுப்புண் ஆறும்.


காரமானா ஊறுகாய், மிளகாய், வற்றல் என்று வாய் ருசிக்காக சாப்பிடாதீர்கள். பரோட்டா வேண்டவே வேண்டாம். பிராய்லர் கோழிக்கறி வேண்டாம். ஜீனியை தவிர்த்து வெல்லம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இரவு பணி முடித்துவிட்டு 11 மணிக்கு மேல் நடுஇரவில் கடினமான உணவுகளை உண்ணுதல் கூடாவே கூடாது இவ்வாறு உண்டுவிட்டு உடன் படுக்கச் செல்வது அதைவிடப் பெருங்கேடு!

இரவு உணவை 9 மணிக்குள் முடித்துவிடுங்கள். வீட்டிற்குவர நேரம் ஆகும். என்றால், வீட்டுலிருந்து உணவை எடுத்துச் சென்று அல்லது உணவகத்தில் சரியான நேரத்தில் சாப்பிட்டுவிடுங்கள்.

தயிர் சாப்பிடாதீர்கள். நீர் அதிகம் கலந்து மோர் சாப்பிடுங்கள். ஒரு டம்ளர் மோரில் 260 மிகி. கால்சியம், ஏழு மில்லியன் லாக்டோ பாசில்ஸ் உள்ளது. மோர் பெருக்கி, நெய் உருக்கி உண்ண வேண்டும் என்கிறது தமிழர் மருத்துவம்.

மது, புகை, போதை வேண்டாம். இவற்றை நாடிச் செல்லும் போது உங்கள் எதிர்காலத்தை எண்ணுங்கள். உங்கள் பிள்ளைகளை, மனைவியை, பெற்றோரை எண்ணுங்கள்.

தலைக்கவசம் அணியுங்கள். அதிவேகம் வேண்டாம். உங்களை நம்பியிருப்பவர்களை நினைத்துச் செயல்படுங்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!