அக்குள் பகுதியில் துர்நாற்றம் அடிக்கிறதா..? இதை நீருடன் கலந்து பூசினாலே போதும்..!


வீட்டில் இருக்கும் முக்கியமான பொருட்களில் சமையல் சோடாவும் ஒன்று. இது சமையலில் பலவற்றிற்கு உதவுவதுடன் வீட்டைச் சுத்தப்படுத்துவத்ற்கும் மற்றும் சருமத்தின் அழகிற்கும், உடலின் ஆரோக்கியத்திற்கும் பலவிதத்தில் உதவுகின்றது.

சமையல் சோடா பாதுக்காப்பானது அத்துடன் உடலிற்கு தீங்கை விளைவிப்பதில்லை.
சமையல் சோடாவின் முக்கிய ஏழு பயன்பாடுகள்.

1. வயிற்றுத் தொல்லைகளை குணப்படுத்தும்.

வயிற்றுக் கோளாருகளின் போது ஒரு தேக்கரண்டி சமையல் சோடாவை ஒரு கோப்பை நீரில் கலந்து குடித்தால் முற்றாக குணமடைந்து விடும்.

2. இயற்கையான சம்போவாக பயன்படுத்த முடியும்.

நாம் பயன்படுத்தும் சம்போவில் சிறிதளவு சமையல் சோடாவை சேர்த்து பயன்படுத்துவதனால் அழுக்குகள் இலகுவாக நீங்கும்.

3. வேனிற் கட்டியை குணப்படுத்தும்.

குளிக்கும் நீரில் ½ கப் சமையல் சோடாவை கலந்து வேனிற்கட்டிகளை ஊற வைத்து குளிக்கவும். குளித்த பின்பு துவாயினால் துடைப்பதை தவிர்க்கவும்.

சருமம் தானாக உலருவதுடன் பாதிக்கப்பட்ட சருமம் குணமடைந்து விடும்.


4. தேனீ, குளவி கொட்டுதலினால் ஏற்படும் காயத்தை ஆற்றும்

சமையல் சோடா சக்தி வாய்ந்த காரத்தன்மை உடையதால், தேனீ, குழவி கொட்டுவதனால் ஏற்படும் நச்சுத்தன்மையை இலகுவாக நீக்கி விடும்.

சமையல் சோடாவை நீருடன் கலந்து பசை போன்று தயாரித்து அதனை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வருவதனால் அழுக்குகளை நீக்க முடியும்.

5. இயற்கையான டியோடிரண்டாக பயன்படுத்தலாம்.

சமையல் சோடாவை நீருடன் கலந்து பசை போன்று தயாரித்துக் கொள்ளவும். இதனை அக்குள் பகுதிகளில் தடவி வருவதனால் துர்நாற்றம் நீங்குவதுடன் வியர்வையையும் தடுக்கின்றது.

6. பாதத்தின் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றது.

பாதத்தை கழுவ பயன்படுத்தும் கலவையுடன் சிறிதளவு சமையல் சோடாவை கலந்து அதில் பாதத்தை கழுவுவதனால் பாதத்தில் உள்ள பூஞ்சை தொற்றுக்கள் நீங்கி சருமம் மிருதுவாகும்.

7. சிராய்ப்புக் காயங்களைக் குணப்படுத்தும்.

சமையல் சோடாவை நீரில் கலந்து அந்த நீரில் பாதத்தை ஊற வைத்து கழுவி வந்தால் சிராய்ப்புக் காயங்கள் நீங்கி பாதங்கள் மிருதுவாகும்.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!