இரவில் தூக்கம் வரலியா..? இத படிச்சிட்டு முடிவு பண்ணுங்க..!


தூக்கத்திற்கு செல்லும் போது உங்களுக்கும் இந்த கெட்ட பழக்கங்கள் இருந்தால் உடனே அதனை தவிர்ப்பது மிகவும் அவசியமானது.

1. நீங்கள் புத்தகம் படிப்பதில் ஆர்வம் உள்ளவர்களாக இருந்தால் படுக்கைக்கு செல்லும் போது புத்தகம் படிப்பதை தவிர்த்தல் அவசியம்.

2. தூங்கச் செல்வதற்கு முன்பு கையடக்கத் தொலைபேசி, கணனி போன்றவற்றை தூரத்தில் வைத்திருப்பது முக்கியமானது. ஏனெனில் அதில் உள்ள பிரகாசமான திரை வெளிச்சம்
தூக்கத்திற்கு இடையூறாக இருக்கும்.

3. பகல் நேரங்களில் தூங்குவதை தவிர்த்தால் இரவில் சரியான தூக்கத்தைப் பெற முடியும்.

4. நான்கு மணிநேரத்திற்கு முன்பாகவே கோப்பி, தேநீர் அருந்த வேண்டும். ஏனெனில் காஃபின் உடலை புத்துணர்ச்சி பெற வைக்கும் தன்மை கொண்டது.

5. பிரகாசமான மணிக்கூடுகளை எச்சரிப்பு மணியாக பயன்படுத்தினால் மூளையை தூண்டி விட்டு தூக்கத்தில் பிரச்சினையை ஏற்படுத்தும்.

6. தூங்கும் போது குப்பறப்படுத்தலையும் நிமிர்ந்து படுத்தலையும் தவிர்த்து உங்களுக்கு ஏற்றவாறு படுக்கை நிலையை தேர்வு செய்ய வேண்டும்.


7. தூங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பு உடற்பயிற்சி செய்வதனால் உடலிற்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

8. சிறந்த தரமான மெத்தைகளை பயன்படுத்துவதனால் நல்ல தூக்கம் கிடைக்கும்.

9. தூங்குவதற்கு இரண்டு மணி நேரங்களிற்கு முன்பாக இரவு சாப்பாட்டை எடுத்துக் கொள்வதனால் சமிபாட்டிற்கு உதவுவதுடன் சிறந்த தூக்கமும் கிடைக்கும்.

10. பாதங்கள் குளிர்வடைந்தால் தூக்கமின்மை ஏற்படும். எனவே சூடான காலுறைகளை பயன்படுத்துவது சிறந்தது.

11. தூங்குவதற்கு முன்பு பானங்களை அருந்தினால் அடிக்கடி கழிவறைக்குச் செல்வதனால் தூக்கத்தில் பாதிப்பு ஏற்படும்.

12. தூங்குவதற்கு முன்பாக பல்துலக்கி, முகம் கழுவுதல் அவசியம். அத்துடன் நமது மனதை தூக்கத்திற்காக தயார் செய்து கொள்ள வேண்டும்.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!