கண்ணாடியில் நாக்கை பார்த்து உங்கள் ஆரோக்கியத்தை தெரிந்து கொள்வது எப்படி?


ஆரோக்கியமான வாழ்க்கை அணைவருக்கும் முக்கியமானது. உடல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே நம்மால் எதையும் சாதிக்க முடியும்.

சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவுகள் மற்றும் தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதனால் உடலை ஆரோக்கியமாக வத்திருக்க முடியும்.

இதையே மருத்துவ நிபுணர்களும் கூறுகின்றனர்.

உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டாலும் சில நோய்கள் வருவதை தவிர்க்க முடிவதில்லை.

நம் உடலில் நோய்கள் ஏற்பட்டால் அல்லது நோய்கள் நோய் ஏற்பட போவதை நாக்கை வைத்தே இலகுவாக கண்டு பிடித்து விட முடியும்.

பழைய சீன வைத்திய முறையில் நாக்கினை வைத்தே உடலின் ஆரோக்கியத்தை கூறி விடுவார்கள்.
கண்ணாடியில் நாக்கை பார்த்து உங்கள் ஆரோக்கியத்தை தெரிந்து கொள்வது எப்படி?

1. வெள்ளை நாக்கு – Yeast தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளது.

2. சிவப்பு நாக்கில் மஞ்சள் கொழுப்பு படிவுகள் – சிறுநீரக தொற்று மற்றும் சரும பிரச்சினைகள்.

3. மஞ்சள் நாக்கு – தொற்றுக்கள்.

4. இளஞ் சிவப்பு நாக்கு – விட்டமின் பி12.

5. றோஸ் நிற நாக்கில் வெள்ளை நடுப் பகுதி – நீர் தேக்கம்.

6. இருண்ட நாக்கு – கெட்ட இரத்த ஓட்டம்.

7. பளுப்பு நிற நாக்கு – இரும்புச் சத்து குறைபாடு.

8. கடுஞ் சிவப்பு நிற நாக்கில் மஞ்சள் நிற படிவு – உடல் வறட்சி.

9. ஊதா நிற நாக்கு – குருதியோட்ட நிறுத்தம்.


நாக்கின் பூச்சு/ படிவு

நாக்கின் நடுப்பகுதி அல்லது பின் பகுதிகளில் படிவுகள் காணப்படும். அதன் மூலம் உடலில் மெட்டபோலிச செயற்பாட்டை இலகுவாக கண்டறிய முடியும்.

• வெளிர் நிற மெல்லைய வெள்ளைப் பூச்சுள்ள நாக்கு ஆரோக்கியமான சமிபாட்டு தொழிற்பாடு நடை பெறுவதை அறியத் தருகின்றது.

• அடர்த்தியான பூச்சுள்ள நாக்கு காணப்பட்டால் சமிபாட்டு செயற்பாடு குறைவான அளவிலே நடை பெறுகின்றது. அடர்த்தியான பூச்சு வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

• நாக்கில் பூச்சுக்கள் அற்று காணப்பட்டால் உடலில் திரவ அளவு குறைவடைந்துள்ளதை உணர்த்துகின்றத்து. எனவே உடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான திரவத்தினை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடர்த்தியான நாக்கின் படிவுகளை பெறுவது எப்படி?

1. நொதிக்கப்பட்ட உணவுகள் மற்றும் புரோபயோட்டிக் பானங்களை அருந்துவதனால் குடலின் செயற்பாடு சிறப்படையும்.

2. 80 வீதம் மாவு சத்துள்ள காய்கறிகளையும் 20 வீதம் உங்களுக்கு பிடித்த ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்

3. சமைத்த உணவுகளை உட்கொள்வதனால் சமிபாட்டை சீராக்க முடியும்.

4. மூலிகை வாசனைத் திரவியங்களை பயன்படுத்துவதன் மூலம் சமிபாட்டை அதிகரித்தல்.

5. சாப்பிடுவதற்கு 20 நிமிடங்கள் முன்பு சூடான இஞ்சி தேநீரை அருந்தினால் சமிபாடு சிறப்பாக நடைபெறும்.

6. சமிபாட்டு நொதிகளை எடுத்துக் கொள்வதனால் கனியுப்புக்களை உறிஞ்சும் தன்மையை அதிகரிக்க முடியும்.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!