மஞ்சள் வாழைப்பழம் சாப்பிட்டால் நல்லதா..? கருப்பு புள்ளிகள் விழுந்தவுடன் சாப்பிட்டால் நல்லதா..?


வாழைப்பழத்தில் மாவுச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ் மற்றும் விட்டமின் போன்ற சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளது.

ஆனால் இவ்வளவு சத்துக்கள் நிறைந்த வாழைப்பழத்தை மஞ்சளாக இருக்கும்போது சாப்பிட வேண்டுமா? கருப்பு புள்ளிகள் விழுந்தவுடன் சாப்பிட வேண்டுமா?

என்ன குழப்பமாக இருக்கிறதா? பதில் தெரிஞ்சுக்க வாசிப்பை தொடருங்கள்…

வாழைப்பழம் கருப்பு புள்ளிகள் விழுந்தவுடன் உண்பதுதான் நல்லது. ஏனெனில் அதுதான் மரபணு மாற்றப்படாத ஆரோக்கியமான வாழைப்பழம்.

** கருப்பு புள்ளிகள் அதிகமாக கொண்டுள்ள வாழைப்பழம் சாப்பிடுவதால், அது புற்றுநோய் எதிர்த்து போராடி, புற்றுநோய் கட்டிகள் உண்டாகாமல் தடுக்கிறது.

** கருப்பு புள்ளிகள் கொண்டுள்ள வாழைப்பழத்தில் தான் விட்டமின் B, C, பொட்டாசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் அதிகமாக உள்ளது.

** கருப்பு புள்ளிகள் உள்ள வாழைப்பழத்தை சாப்பிட்டால், அது செரிமானத்தை சீராக்கி, எளிதில் உணவுகளை ஜீரணம் செய்ய உதவுகிறது.

** கருப்பு புள்ளிகள் உள்ள வாழைப்பழம் சாப்பிடுவதால், புரோபயாடிக் அதிகமாக கிடைக்கிறது. மேலும் இது பெருங்குடல் ஆரோக்கியத்தை சீராக்குகிறது.

** கருப்பு புள்ளிகள் இருக்கும் வாழைப்பழத்தில் இயற்கை சர்க்கரை (இனிப்பு) அதிகம்.

** கருப்பு புள்ளி இல்லாத வாழைப் பழத்தில் மாவுச்சத்து அதிகம், இதனால், வயிறு சீக்கிரம் உப்பிவிடும்.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!