தொள தொளவென தொங்கும் தொடையை வீட்டிலேயே இயற்கையாக குறைப்பது எப்படி..?


தொடை பருமன் அதிகரித்தால் இறுக்கமான உடலமைப்பிற்கு பொருந்தாது. அதிகமான பெண்களுக்கு தொடை மற்று இடுப்பு பகுதிகளில் கொழுப்பு சேர்ந்து விடுகின்றன.

கர்ப்பகாலம், ஹார்மோன்களின் சம நிலையற்ற தன்மை, உணவுப் பழக்கங்கள், மற்றும் பரம்பரையால் அதிகளவான கொழுப்பு தொடைப் பகுதியில் சேர்கின்றன.

ஆனால் தொடையின் பருமனை மட்டும் குறைப்பதற்கான சாத்தியம் குறைவானது, எனவே முழு உடலின் கலோரியை குறைப்பதனால் தொடையின் அளவும் குறைவடையும். உடற்பயிற்சி, வாழ்க்கை முறை, உணவுப் பழக்கங்களை மாற்றுவதனால் பருமன் குறைந்து மெல்லிய தொடையை பெற முடியும்.

வளைவான அழகிய தொடையை பெறுவது இலகுவானதல்ல, சிலருக்கு இவை பரம்பரையாலும் கிடைக்கும், ஆனால் மெல்லிய அழகிய வடிவமுடைய தொடை இருப்பதனால் மிக இலகுவானதாக இருக்கும்.

வீட்டிலேயே சிறந்த தொடை அமைப்பை பெறுவது எப்படி?

1. கார்டியோ உடற்பயிற்சி.

தினமும் அல்லர்து வாரத்தில் 5 நாட்கள் கார்டியோ பயிற்சி செய்வதனால் கால்களின் பருமன் குறைவடையும்.

வீட்டிற்குள் சைக்கிள் ஓட்டம், ஒடுதல். கயிறு கட்டி பாய்தல் போன்றவற்றால் சிறந்த பலன் கிடைக்கும்.

2. கொழுப்புக் குறைந்த அல்லது கொழுப்பற்ற உணவுகள்.

தொடையின் பருமனிற்கு உணவுப் பழக்கங்கள் முக்கியமானது. கொழுப்புகள் குறந்த அல்லது கொழுப்பு அகற்றப்பட்ட உணவுகளை உட்கொள்வது சிறந்தது.

புரோட்டின் அதிகம் உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்வதுடன், சர்க்கரையை குறைப்பதோ அல்லது முற்றாக அகற்றுதல் வேண்டும்.கொழுப்பு நீக்கிய பால், தயிரை உணவில் சேர்த்துக் கொள்ள முடியும்.

3. Lunges பயிற்சி.

Lunges எனப்படும் உடற்பயிற்சி முறை தொடைக்கு சிறந்த தீர்வை கொடுக்கின்றது. இது உடல் முழுவதும் உள்ள தசைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அத்துடன் நடந்து கொண்டு செய்யப்படும் Lunges சிறந்த பல நன்மைகளை செய்கின்றது.

4. காலை உணவு.

காலை உணவு தவறாது உட்கொள்ளுதல் மிகவும் அவசியமானது. மூன்று வேளை உணவுகளிற்கு இடையில் உண்ணப்படும் சிற்றூண்டிகளால் உணவுகளில் கலோரிகளை குறைப்பதற்கு உதவும்.

5. யோகா.

அழகிய தொடையின் வடிவத்திற்கு யோகா கைகொடுக்கின்றது. சூரிய நமஸ்காரம் போன்ற பல யோகா ஆசனங்களை தொடையில் உள்ள கொழுப்புக்கள் குறைவடைகின்றன.

யோகாவினால் சிறந்த பலனை நிச்சயம் பெற முடிகின்றது.

6. நீர்.

நீரை அதிகமாக அருந்துவதனால் உடலில் உள்ள நச்சுத் தன்மைகள் இலகுவாக வெளியேறும். பழங்கள் மற்றும் காய் வகைகளில் அதிகம் நீர்ச் சத்துக்கள் உள்ளதனால் அதனை உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது.

தினமும் குறைந்தது 2 லீட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.

7. தேங்காய் எண்ணெய்.

சூடான தேங்காய் எண்ணெய்யைப் பயன்படுத்தி 10 முதல் 15 நிமிடங்கள் வரை நன்றாக மசாஜ் செய்து 30 நிமிடங்களின் பின்பு நீரினால் கழுவவும்.

இதனால் கொழுப்புக்கள் கரைந்து சக்தியாக மாறுகின்றன.

8. கோப்பி ஸ்கரப்.

சிறு துகள்களாக உள்ள கோப்பியை சருமத்தில் தேய்ப்பதனால் தசைகளில் உள்ள கொழுப்புக்களை கரைத்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றது.

9. ஆப்பிள் சிடர் விநாகிரி.

கொழுப்பைக் குறைப்பதற்கு சிறந்த இயற்கைத் தீர்வு ஆப்பிள் சிடர் விநாகிரியே.

இது அதிகமாக படிவடையும் கொழுப்புக்களையும், நச்சுக்களையும் இலகுவாக உடலில் இருந்து வெறியேற்றும்.

சிறந்த வடிவமுடைய தொடையை பெறுவதற்கு கடினமான பயிற்சி தேவை.

உடலின் தேவையற்ற கலோரிகளைக் குறைப்பதனால் தொடையின் பருமனும் குறைவடைந்து அழகிய தோற்றம் கிடைக்கும்.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!