இந்த உணவுகளை சாப்பிட்டால் அடிச்சு போட்ட மாதிரி தூக்கம் வருமாம்..!


பலருக்கு படுத்தவுடன் தூக்கம் வராமல் இருப்பதும், தூக்கத்தின் நடுவே எழுந்து கொள்வதும் தவிர்க்க முடியாத பிரச்சினை.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு போதியளவு தூக்கம் அவசியமானது. உடல் எடை, அதிகப்படியான மன அழுத்தம், உயர் இரத்த அழுத்தம், இதய நோய், நீரிழிவு நோய் போன்ற பல ஆரோக்கிய குறைபாட்டினால் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றோம்.

60% அதிகமான அமெரிக்க மக்கள் தூக்கமின்மை பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர். சம அளவான ஊட்டச்சத்து உணவு, போதியளவு தூக்கம், ஒழுங்கான உடற்பயிற்சி ஒருவரது ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது.

தூக்கமின்மையை குணப்படுத்துவதற்கு மருந்துகளை பயன்படுத்துவதற்கு பதிலாக சிறந்த உணவுகளை தேர்வு செய்வதன் மூலம் சிறந்த பலனைப் பெற முடியும்.

தூக்கப் பிரச்சினையைத் தீர்க்கும் உணவுகள்.

1. வாழைப்பழம்.

தினமும் படுக்கைக்கு செல்வதற்கு முன்பு ஒரு வாழைப்பழத்தை எடுத்துக் கொள்வது சிறந்தது. நீங்கள் நீரிழிவு நோயாளார்களாக இருந்தால் பாதி பழத்தை எடுத்துக் கொள்ள முடியும்.

இதில் உள்ள அதிகளவான பொட்டாசியம் பிடிப்புக்கள் வராமல் தடுக்கும், மக்னீசியம் தசைகளிற்கு ஓய்வைக் கொடுத்து நிம்மதியான தூக்கத்தை தருகின்றது.

இதில் உள்ள tryptophan தூக்கமின்மை பிரச்சினையை முற்றாக நீக்கி விடும்.

2. சால்மன் மீன்.

சால்மன் மீனில் ஒமேகா-3 அதிகம் உள்ளதால், இது மன அழுத்தத்தை குறைத்து ஒய்வெடுப்பதற்கு உதவுகின்றது.

இதில் உள்ள விட்டமின் பி6 மெலரனினை தூண்டுவதன் மூலம் தூக்கத்திற்கு உதவுகின்றது. இதில் அதிகம் புரோட்டின் உள்ளதால் இரவு முழுவதும் வயிறு நிறைவாக இருக்கும்.

இதனை தொடர்ந்து உணவில் எடுத்துக் கொள்வதனால் அதில் உள்ள விட்டமின் டி சிறந்த தூக்கத்தை தருகின்றது.

3. மூலிகைத் தேநீர்.

மூலிகை தேநீர் தூக்கத்தை சீராக்க வல்லது. எல்லா தேநீரும் பலனை கொடுப்பதில்லை என்றாலும் chamomile தேநீரில் flavanoid apigenin இருப்பதனால் தூக்க குறைபாட்டை குணப்பத்துகிறது.
புதினா, லாவண்டர், வெலரின் தேநீர்களும் உடல் ஓய்வெடுக்க உதவுகின்றது.

ஆனால் படுக்கைக்கு செல்வதற்கு முன்னர் கறுப்பு அல்லது பச்சை தேநீர் குடித்தால் தூக்கத்தில் பிரச்சினைகள் ஏற்படுக்கின்றது, எனவே அதனை தவிர்த்தல் சிறந்தது.

4. தயிர்.

கல்சியம் குறைபாடு இருந்தாலும் தூக்கத்தில் பிரச்சினை ஏற்படுகின்றது. உடலிற்கு தேவையான கல்சியம் கிடப்பது மிகவும் அவசியமானது.

எனவே தினமும் பால், தயிர், பாலில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும்.

மேலும் கல்சியம் நிறைந்த பச்சை இலை வகைகளை எடுத்துக் கொள்ளுதல் சிறப்பானது.

5. செரி.

செரி பழத்தினால் தூக்கப் பிரச்சினை இலகவாக குணப்படுத்த முடியும். ஒரு கோப்பை (250ml) செரி பானத்தை உட்கொள்வதனால் தூக்கத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களான மெலரனின் அளவை அதிகரிக்கச் செய்யும்.

இது சிறந்த தூக்கத்தை தருவதுடன் தூக்க அலை சுழற்சியை(circardian rhytham) சீராக்குகின்றது. பானத்திற்கு பதிலாக உடன் அல்லது காய்ந்த பழங்களை சாப்பிடுவதனாலும் நல்ல தூக்கத்தை பெற முடியும்.

6. முழு தாணியம்.

BARLEY, BULGUR எனும் முழு தாணிய வகைகளில் அதிகளவில் மக்னீசியம் உள்ளது.

பலர் உணவுப் பட்டியலில் மக்னீசியம் உள்ள உண்வுகளை அதிகளவில் சேர்த்துக் கொள்வதில்லை. மக்னீசியம் குறைபாடு இருந்தால் தூக்கத்தில் பிரச்சினை ஏற்படும்.

7. கோகோ.

கோகோ இயற்கையாகவே தூங்கச் செய்யும். தினமும் தூங்குவதற்கு முன்பு ஒரு கப் கோகோ சாப்பிடுவதனால் நன்றாக தூங்க முடியும்.

சாக்லேட்டில் உள்ள அதிகப்படியான மக்னீசியம் தூக்கத்தை மேம்படுத்த உதவுகின்றது.

மேலும் இனிப்பு சுவையற்ற கோகோ பவுடரில் உள்ள tryptophan சிறந்த பலனை தரும்.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!