நீரிழிவைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்ல, ஆண்மையை அதிகரிக்க உதவும் வெண்டைக்காய்!


வெண்டைக்காயை ஒவ்வொரு ஊர்களில் வெவ்வேறு பெயர் கொண்டு அழைக்கின்றனர். இந்த பச்சைக் காயை மென்று சாப்பிடுவதனால் சிறந்த நன்மைகள் கிடைக்கின்றன.

பிலிப்பைன்ஸ் நாடுகளில் இந்த வகையான காய்வகைகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனை பச்சையாகவும், பிஞ்சு பதத்தில் அதிகம் பயன்படுத்துவார்கள்.

இதனை ஊறுகாயாகவும், சூப்பிலும், கறி வகைக்கும் மற்றும் இதனை எண்ன்ணெய்யாகவும் பயன்படுத்துகின்றனர்.

இதில் கரையும் மற்றும் கரையாத நார்ப் பொருட்கள் அதிகளவில் உள்ளன.

வெண்டைக்காய் சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள்.

இதில் உள்ள கனியுப்புக்கள், விட்டமின்கள் மற்றும் ஓர்கானிக் சேர்மங்கள் பல நன்மைகளைச் செய்கின்றன.


1. நீரிழிவு நோய்.

வெண்டைக்காய் இரத்த குளுக்கோஸ் அளவை குறைக்க உதவுகின்றது, இதில் உள்ள eugenol எனும் நார்ப் பொருள் குளுக்கோஸ் அளவை நிலையாக வைத்திருக்க உதவுகின்றது.

இது சிறுகுடலில் குளுக்கோஸ் உறிஞ்சும் அளவை அதிகப்படுத்துகிறது.

2. கொழுப்பைக் குறைத்தல்.

வெண்டைக்காய் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பதுடன் atherosclerosis வராமல் தடுக்கின்றது.

இது கொழுப்பை உடலில் படிய விடாமல் தடுக்க உதவுகின்றது

3. சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

வெண்டைக்காய் சருமத்தில் உள்ள தளும்புகள், பருக்கள் சுருக்கங்களின் தோற்றத்தைக் குறைக்கும்.

அத்துடன் இதில் உள்ள விட்டமின் சி திசுக்களை சரி செய்வதற்கும் சரும பிரச்சினைகள் வராமல் தடுப்பதற்கும் உதவுகின்றது.


4. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

இது நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கியமானது.

இதில் அதிகமுள்ள ஆனிஒக்ஸிடன், விட்டமின் சி, கனியுப்புக்களான மக்னீசியம், மங்கனீஸ், கல்சியம், இரும்பு உடலில் உள்ள தொற்றுக்களை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றது.

5. பார்வையை மேம்படுத்தும்.

வெண்டைக்காயில் உள்ள xanthine, lutein சக்தி வாய்ந்த ஆண்டிஒக்ஸிடண்டாக செயற்பட்டு நச்சுத் தன்மையை அழிக்கின்றது.

அத்துடன் கிலாகோமா, கண் புரை நோய் வராமல் தடுக்கின்றது.

இதில் உள்ள மருத்துவ குணங்களும் ஊட்டச்சத்துக்களும் இரத்தத்தின் குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்த உதவுகின்றது.

இதனை நம் உணவுப் பட்டியலைப் பொறுத்து பச்சையாக, சமைத்து அல்லது அவித்து உட்கொள்ள முடியும்.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!