காலை தொங்கப்போட்டு எப்பவும் உட்காருபவரா..? அப்படியானவங்க இத படிங்க..!!


நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்க வைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம். பைக்கில் செல்லும்போது, பேருந்தில் இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், சேர் இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிக நேரமாக காலைத் தொங்க வைத்துக் கொண்டே இருக்கிறோம்.

இப்படிக் காலைத் தொங்க வைத்து அமர்வதால் நமக்குப் பல நோய்கள் உண்டாகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?

காலைத் தொங்க வைத்து உட்காரும்பொழுது நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ் பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது. இடுப்புக்கு மேல் பகுதியில் சரியாக இரத்த ஓட்டம் கிடைப்பதில்லை.


நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு உட்காரும்போது இடுப்புக்குக் கீழே இரத்த ஒட்டம் குறைவாகவும், இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள, கால்களுக்கு நடக்கும் பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்.

மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல் பகுதியில் தான் இருக்கிறது.

எனவே ஒருவர் காலை தொங்கப் போடாமல் சம்மணங் கால் போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தி அதிகமாக கிடைக்கிறது. ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!