வீட்டிலேயே விற்றமின் அடங்கிய நீரைத் தயாரித்து தட்டையான வயிற்றை பெறுவது எப்படி..?


வியாபார சூழலில் வேறுபட்ட அடையாளங்களுடன் போத்தலிடப்பட்ட தண்ணீர் போத்தல்கள் இருப்பது நாம் அறிந்ததே.

இவை யாவும் வித்தியாசமான சுவையை கொண்டு காணப்படுகிறது. இவை உடலை சீராக வைத்திருக்கும் என வாக்களித்தும் உள்ளனர். இது உண்மையா?

தண்ணீர் போத்தல்களிலுள்ள செயற்கையான சுவையூட்டிகளானது உடலுக்கு ஊறினை ஏற்படுத்தும் என்பது தெரியாமல் கூட உங்களுக்கு இருக்கலாம்.

எனவே அதற்கு பதிலாக வீட்டிலேயே விற்றமின் அடங்கிய நீரைத் தயாரித்து எமக்குள் புத்துணர்ச்சியை உருவாக்கி கொள்ளலாம்.

இது இயற்கையானதும், பூரணமானதாகவும், உடலைத் தூய்மைப்படுத்தக் கூடியதாகவும், உடல் எடையைக் குறைப்பதாகவும், உணவைச் செறிமானம் அடையச் செய்வதாகவும் காணப்படும்.

• தேவையான பொருட்கள்

 8 கோப்பை/ 65 oz /2 லீற்றர் தண்ணீர்

 1 தேக்கரண்டி துருவிய இஞ்சி

 1 நடுத்தர பருமனுள்ள வெள்ளரிக்காய்

 1 எலுமிச்சை

 12 புதினா இலைகள்

• தயாரிக்கும் முறை


எந்த பொருட்களினதும் புறத்தோலை நீக்க வேண்டாம். காரணம் அதில் ஆரோக்கியத்துக்கு உறுதுணையான சத்துக்கள் உண்டு.

ஆனால் தெரிவு செய்த உணவுப் பொருட்கள் 100% இயற்கையான உணவா என்பதையும் பார்க்க வேண்டும்.

வெள்ளரிக்காயை துண்டுகளாக வெட்டி அதில் எலுமிச்சையையும் துண்டுகளாக வெட்டி மேசன் (mason) ஜாடி ஒன்றில் இட வேண்டும்.

பொருட்கள் அனைத்தும் கலவையான பின் இறுதியில் அவற்றை நீரிலிட்டு குறித்த டிடொக்ஸ் நீரை 8 மணித்தியாலங்கள் குளிரூட்டியில் வைக்க வேண்டும்.

இடைக்கிடையே கலக்கி விட மறக்க கூடாது.

இதிலுள்ள ஒவ்வொரு பொருட்களும் குடலின் செயற்பாட்டில் சிறந்த நிலையைக் காட்டுவதோடு உணவு ஜீரணமடையும் தன்மையை அதிகரித்து உடலிலுள்ள நச்சுத் தன்மையை இல்லாது செய்கிறது.

• எலுமிச்சை – விற்றமின் C அதிகளவில் உள்ளது. உடலிலுள்ள நச்சு நீக்க செயற்பாட்டிற்கான முக்கிய தூண்டுதலை செய்கிறது.

• வெள்ளரிக்காய் -90% நீர்த்தன்மைக் கொண்டது. டிடொக்ஸ் செயல் முறையில் குறிப்பிட்ட பதார்த்தங்கள் வெளியேறத் தூண்டும்.

• இஞ்சி – க்ளைசெமிக் இன்டெக்ஸ்(glycemic index) சீராகப் பராமரிக்க உதவும். இது உடலில் ஏற்படும் பிடிப்புகள், வலிகளுக்கு நிவாரணமாக அமையும்.

• புதினா – நிறை குறைத்தலில் முக்கிய பங்கை ஆற்றுகிறது. உடலில் நச்சுத் தன்மையால் ஏற்படும் பாதிப்புகளையும், வயிற்று வலியையும் குறைக்கிறது. – © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

.