சிவப்பு நிறத்தில் ஆப்பிளின் ‘ஐபோன் 8’ அறிமுகம் – ஏன் தெரியுமா?


ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன்களை சிவப்பு நிறத்தில் அறிமுகம் செய்துள்ளது.

இத்துடன் ஐபோன் X ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது புதிய சிவப்பு நிறத்தில் அறிமுகம் செய்யப்படவில்லை என்றாலும் புதிய லெதர் ஃபோலியோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரூ. 95,390 மதிப்புள்ள ஐபோன் எக்ஸ் 64 ஜிபி ஸ்மார்ட்போன் ரூ. 79,999க்கும், ரூ.1,08,930 மதிப்புள்ள ஐபோன் எக்ஸ் 256 ஜிபி ஸ்மார்ட்போன் ரூ.97,999க்கும் அமேசானில் விற்கப்படுகிறது. இந்த தள்ளுபடி விலையில் வரும் ஏப்ரல் 16 வரை விற்கப்பட உள்ளது. ஹெச்எடிஎப்சி கார்டு வைத்துள்ளவர்களுக்கு கூடுதலாக 5 ஆயிரம் கேஸ்பேக் தரப்படுவதுடன், தவணை முறையும் வழங்கப்படுகிறது

புதிய ஸ்பெஷல் எடிஷன் ஐபோன்கள் ஆப்பிள் அதிகாரப்பூர்வ விற்பனையாளர்கள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட மொபைல் நெட்வொர்க் மூலம் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இன்று (ஏப்ரல் 10) மாலை 6.00 மணி முதல் முன்பதிவு செய்யப்படுகிறது.

சிவப்பு நிற ஐபோன் 8 சீரிஸ் மே மாத விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் ஸ்பேஸ் கிரே, சில்வர் மற்றும் கோல்டு நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

புதிய ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் சிவப்பு நிற எடிஷன் விலை ரூ.67,940 முதல் துவங்குகிறது.

புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனின் வடிமைப்பை அழகு மிளிரும் வகையில், சிவப்பு நிறமாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு ஏற்றபடி அலுமினியம் பேன்ட் வழங்கப்பட்டுள்ளது.

மற்றபடி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களில் தற்சமயம் விற்பனையாகும் மாடல்களில் உள்ளதை தவிர எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

ஆப்ரிக்காவில் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஆப்பிள் சாதனங்களுக்கு சிவப்பு நிறம் வழங்கப்பட்டுள்ளது.

ஐபோன்கள் மட்டுமின்றி ஐபாட் மற்றும் ஐபேட் உள்ளிட்ட சாதனங்களின் சிவப்பு நிற எடிஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!