பற்சிதைவைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய் பற்பசையை வீட்டில் தயாரிப்பது எப்படி..?


முகத்தின் அழகிற்கு அரோக்கியமான வெண்ணிறப் பற்கள் முக்கியமானது. பற்சிதைவினால் பற்களின் ஆரோக்கியத்தையும் அழகையும் இழந்து விடுகிறோம்.

பற்கள் சிதைவடைவதனால் இதய நோய், சுவாச நோய், தலை வலி போன்ற பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன்.

இனிப்பு உணவு வகைகளை அதிகம் உட்கொள்வதால் வாயில் அமிலத் தன்மை அதிகரித்து பற்சிதைவை ஏற்படுத்துகின்றன.

பற்களைப் பாதுகாப்பதற்காக பயன்படுத்தும் பற்பசைகள் உடலிற்கும், வாய் பகுதிகளிலும் அதிக பக்க விளைவுகளையே ஏற்படுத்துகின்றன.

ஆனால் இயற்கையில் கிடைக்கும் தேங்காய் எண்ணெய்யில் உள்ள பக்டீரியா தொற்றுக்களிற்கு எதிரான சக்தி வாய் பகுதியை பாதுகாக்கின்றது.

உடலிற்கு தீங்கு விளைவிக்கும் பற்பசைகளை தவிர்த்து தேங்காய் எண்ணெய்யில் வீட்டில் தயாரிக்கும் பற்பசையை பயன்படுத்தினால் சிறந்த பலனைப் பெற முடியும்.

தேங்காய் எண்ணெய் பற்பசை தயாரிக்கும் முறை


தேவையான பொருட்கள்.

• தேங்காய் எண்ணெய் -1/2 கப்

• எண்ணெய்(ந்லுமிச்சப்பழம்/புதினா) – 15-30 துளிகள்

• சமையல் சோடா – 2-3 தேக்கரண்டி

செய்முறை

மேற்குறிப்பிட்ட பொருட்களை நன்றாக கலந்து பசையை தயாரிக்கவும்.

அதனை தினமும் பயன்படுத்துவதனால் பற்சிதைவில் இருந்து பாதுகாக்க முடியும்.

அத்துடன் தினமும் தேங்காய் எண்ணெய் வாய்க்குள் 20 நிமிடங்கள் வைத்து கொப்பளித்தால் வாயில் உள்ள பக்டீரியாத் தொற்றுக்கள் நீங்கும்.- © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!