குளிரூட்டப்பட்ட எலுமிச்சப் பழத்தில் இவ்வளவு நன்மையா?


எலுமிச்சப்பழத்தை உணவுகளின் சுவையூட்டியாகவும், பானமாகவும், வீட்டு வைத்தியத்திலும் அதிகம் பயன்படுத்தி வருகின்றோம்.

இது உடலுக்கு ஊட்டச்சத்தை வழங்கி புத்துணர்ச்சி பெற உதவுகின்றது. பானமாக தயாரிக்கும் போது ஊட்டச்சத்துக்கள், மருத்துவ குணங்கள் இழந்து போகின்றன.

ஆனால் குளிரூட்டப்பட்ட எலுமிச்சப்பழத்தில் பல நன்மைகள் இருப்பதை யாரும் அறிவதில்லை.

இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், கொழுப்பைக் கட்டுப்படுத்தல், புற்று நோயைத் தடுத்தல். பக்டீரியா தொற்றுக்களில் இருந்து பாதுகாத்தல் போன்ற பல நன்மைகளைச் செய்கின்றது.

எலுமிச்சப்பழத்தின் மருத்துவ குணங்கள்

1. ஆஸ்த்துமாவைத் தடுக்கும்

2. வீக்கத்தை நீக்கும்

3. சிறுநீரகம், ஈரல் நச்சுத்தன்மை அடையாமல் பாதுகாத்தல்

4. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

5. இரத்த அழுத்தத்தை சீராக்கும்

6. பக்டீரியாத் தொற்றுக்களை அழிக்கும்

7. மன அழுத்தத்தை குணப்படுத்தும்

8. புற்று நோயுடன் போராடும்.


எலுமிச்சப்பழச்சாற்றில் அதிகளவு விட்டமின் சி உள்ளது. இவை உடம்பில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்ற உதவுகின்றது.

பழத்தை விட எலுமிச்சப்பழத் தோலில் 10 மடங்கு அதிகம் விட்டமின் உள்ளது.

இவை நுரையீரல், மார்பகம் மற்றும் குடல் புற்று நோய்யின் போது புற்றுநோயை ஏற்படுத்தும் கலங்களை அழிக்கின்றது.

ஆனால் இவை ஆரோக்கியாமான கலங்களிற்கு புத்துணர்ச்சியைத் தருகின்றது.

இதில் பானத்தை தயாரிப்பதை விட மென்மையான உணவாக(Smoothies) தயாரிக்கும் போது நன்மைகள் பல உள்ளன.

இந்த உணவில் பழத்தின் தோலையும் சேர்த்துக் கொள்ள முடியும். தோலைப் பயன்படுத்தும் போது கசப்பு அதிகமாக இருக்கும் எனவே அதை குளிரூட்டிப் பயன்படுத்துவது சிறந்து.

எலுமிச்சப்பழத்தை குளிரூட்டுவது எப்படி?

ஆப்பிள் சிடர் விநாகிரியை பயன்படுத்தி எலுமிச்சப்பழத்தை கழுவி உலர விடவும். இதை இரவு முழுவதும் குளுரூட்டியில் வைக்கவும். காலையில் அதை சிறு துண்டுகளாக வெட்டவும், விதை, தோல் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

குளிரூட்டப்பட்ட பழத்தை வாட்டும் உணவு (baked food), smoothies தேநீர், சூப் போன்றவற்றில் சேர்த்துக் கொள்ள முடியும்.- © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!