ஐந்தே நாட்களில் உடல் எடையை குறைக்க உதவும் அற்புதமான தக்காளிப்பழ உணவு..!


கோடைக்காலம் நெருங்கி வந்து விட்டது அதேநேரம் தக்காளி பழத்துக்கான காலமும் நெருங்கி விட்டது.

ஆகவே இதுதான் சரியான தருணம் இந்த உணவு பழக்கவழக்கம் பற்றி பேசுவதற்கு
உங்கள் அன்றாட உணவில் பல ஊட்டசத்துக்கள் இருக்கலாம்.

ஆனால் ஒரு கிண்ணம் தக்காளி பழத்தில் உள்ள ஊட்ட சத்துக்கள் பற்றி நீங்கள் அறிந்துள்ளீர்களா?

விட்டமின் C உடன் விட்டமின் A,E,K, B6, B1 என்பனவும் போலிக் அமிலம்,மக்னீசியம் , இரும்பு சத்து , புரதங்கள் பொட்டாசியம் என்பனவற்றை தன்னகத்தே கொண்டு காணப்படுகிறது.

100கிராம் தக்காளி பழத்தில் 17 கலோரிஸ் மட்டுமே உள்ளது இது கொலஸ்ரோலை கட்டுபடுத்தவும் உடல் எடையை குறைக்கவும் உதவுகின்றன.

இந்த 5 நாட்கள் தக்காளி பழ உணவு முறையை செய்து பாருங்கள்

1) நாள் -௦1

காலை உணவு: கோப்பி, ஒரு துண்டு தக்காளி பழத்துடன் கொழுப்பு குறைந்த சீஸ் துண்டொன்றுடன் ஒரு துண்டு பாண்

மதிய உணவு: ஓமம், பூண்டு சேர்த்து சிறிது ஒலிவ் எண்ணெய் சேர்ந்த ஒரு தக்காளி பாஸ்டா

இரவுணவு: பசளிக்கீரை சேர்த்து அவித்த தக்காளிகள்


2) நாள் -௦2

காலை உணவு: : கோப்பி, ஒரு துண்டு தக்காளி பழத்துடன் கொழுப்பு குறைந்த சீஸ் துண்டொன்றுடன் ஒரு துண்டு பாண்

மதிய உணவு: வெள்ளரிக்காயுடன் தக்காளி சேர்த்து சாலட்

இரவுணவு: தக்காளி மற்றும் வாட்டிய காளான்

3) நாள் -௦3

காலை உணவு: : கோப்பி, ஒரு துண்டு தக்காளி பழத்துடன் கொழுப்பு குறைந்த சீஸ் துண்டொன்றுடன் ஒரு துண்டு பாண்

மதிய உணவு: மரக்கறிகள் மற்றும் சிறிது சீஸ் சேர்த்து ஒரு சாலட்

இரவுணவு: வெதுப்பிய ஒலிவ் எண்ணெய் சேர்த்த மரக்கறிகள்

4) நாள் -௦4

காலை உணவு: பழங்கள் மற்றும் ஜோகட்

மதிய உணவு: பழங்களுடன் வனிலா பால் சேர்த்து 1௦ நிமிடங்களுக்கு பேக் பண்ணி சாப்பிடவும்

இரவுணவு: தக்காளி சோஸ் உடன் பாஸ்டா

5) நாள் -௦5

காலை உணவு:பழங்கள் மற்றும் ஜோகட்

மதிய உணவு: கீரைகள் தக்காளி சேர்த்த சாண்ட்வீச்

இரவுணவு: தேசிக்காய் சாறுடன் ஒலிவ் எண்ணெய் சேர்த்து அவித்த மரக்கறிகள் – © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!